" குஷ்பு இஸ்லாத்தை பற்றிபேச உனக்கு என்ன தகுதி இருக்கு" .?? போட்டு பொளக்கும் சுன்னத் ஜமாத்.

Published : Feb 14, 2022, 01:53 PM IST
" குஷ்பு இஸ்லாத்தை பற்றிபேச உனக்கு என்ன தகுதி இருக்கு" .?? போட்டு பொளக்கும் சுன்னத் ஜமாத்.

சுருக்கம்

ஹிஜாப் என்பது பெண்களுக்கான ஒரு பொது ஆடை, ஒரு பாதுகாப்பு ஆடை இந்நிலையில் சமீபத்தில் கூட ஒரு நடிகை ஹிஜாப் அணிந்துள்ளார். கூறியிருக்கிறார். ஹிஜாப்புக்கு ஒருபோதும் மத அடையாளம் கிடையாது, ஆனால்  எதுவும் தெரியாமல் உளறுவதே குஷ்புவின் வாடிக்கையாக உள்ளது. 

இஸ்லாத்தைப் பற்றி பேசவோ, விமர்சிக்கவோ நடிகை குஷ்புவுக்கு எந்த தகுதியும் இல்லை என சுன்னத் ஜமாத் கூறியுள்ளது. பல நேரங்களில் பல கருத்துக்களை  உளறும் குஷ்பு இந்த விஷயத்திலும் உளறி இருக்கிறார் என அந்த அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. ஹிஜாப் அணிவது பள்ளிக்கூட வாசலோடு நிற்க வேண்டும், வகுப்பறைக்குள் அணிந்து வரக்கூடாது என்றும், தான் ஒரு இஸ்லாமிய பெண்ணாக இருந்தும் இதுவரை ஹிஜாப் அணிந்தது இல்லை என குஷ்பு கூறியுள்ள நிலையில் சுன்னத் ஜமாஅத் குஷ்புவை கண்டித்துள்ளது. 

முஸ்லிம் மாணவிகள் பள்ளிக்கூடங்களில் ஹிஜாப் அணிய கூடாது என கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. இந்துத்துவ அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பள்ளிக்கூடங்கள் என்பது மதத்தை வெளிக்காட்டும் இடம் கிடையாது, மதத்தை காட்ட வேண்டுமென்றால் அதை அவர்கள் வீட்டில் வைத்துக் கொள்ளட்டும், எல்லோரும் பள்ளிக்கூடத்திற்கு சீருடைதான் அணிந்து வரவேண்டும், மீறி அவர்கள் ஹிஜாப் அணிந்தால் நாங்களும் காவி துண்டு அணிந்து பள்ளிக்கூடத்திற்கு வருவோம் என இந்துத்துவ மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் கல்லூரி நுழைவாயில்களில் ஹிஜாப்புக்கு  எதிராக இந்து அமைப்பு மாணவர்கள் காவி கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து இருசக்கர வாகனத்தில்  பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தார். அப்போது போராட்டம் நடத்திக்கொண்டிருந்த மாணவர்கள் அந்த பெண்ணை பின்தொடர்ந்து ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். அப்போது அந்த மாணவி இந்துத்துவா மாணவர்களை எதிர்த்து நின்று அல்லாஹு அக்பர் என பதிலுக்கு முழங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இதற்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்த வண்ணம் உள்ளது. ஹிஜாப் எங்கள் உரிமை, இதை எவரும் தடுக்க முடியாது என இஸ்லாமிய பெண்கள் மாணவிகள் முழங்கி வருகின்றனர். இதில் பலரும் பல வகைகளில் கருத்து கூறி வரும் நிலையில், பாஜகவின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பூ சுந்தர், ஹிஜாப்புக்கு எதிராக காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர்  பள்ளிக்கூடத்திற்கு போகும்போது அங்கு சீருடை அணிய வேண்டுமென்று விதி இருக்கிறது. இஸ்லாமிய பெண்கள் மாணவிகள் ஹிஜாப் அணியலாம், பள்ளிக்கூட கேட் வரை அதை அணிந்து கொள்ளலாம், ஆனால் வகுப்பறைக்கு செல்லும் போது எந்த சாதி அடையாளமும், மத அடையாளமும் இன்றி சீருடை அணிந்து செல்ல வேண்டும். பள்ளிக்கூட விதிமுறையின்படி யாராக இருந்தாலும் அவர்கள் சீருடைய அணிந்துதான் செல்ல வேண்டும். எனது பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும்போது அவர்களுக்கு இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள், நானும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவள்தான் ஆனால் நான் இதுவரை ஹிஜாப் அணிந்தது இல்லை என கூறியிருந்தார்.

இந்நிலையில்தான் நடிகை குஷ்புவின் கருத்தை சுன்னத் ஜமாத் என்ற அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் நிர்வாகி, ஹிஜாப் அணிய கூடாது என குரல் எழுந்திருப்பது. தற்போது சர்வதேச பிரச்சினையாகவே மாறியுள்ளது. உடை அணிவது என்பது ஒவ்வொருவருக்கும் இந்திய அரசியலமைப்பு கொடுத்திருக்கிற சுதந்திரம். இப்போது அந்த சுதந்திரத்தை பறிப்பதாக நிஜாப் தடை போராட்டம் அமைந்துள்ளது. இப்போது மதவாத சக்திகள் இதை கையில் எடுத்துள்ளனர். பெண்கள் எங்கு தனக்கு பாதுகாப்பு இல்லை என்று உணர்கிறார்களோ, எங்கு தனக்கு சுய பாதுகாப்பு தேவை என்று நினைக்கிறார்களோ அப்போது இந்த ஆடையை எடுத்துக் கொண்டால் சுலபமாக இருக்கும் என்றுதான் குரான் சொல்லுகிறதே தவிர இஸ்லாமிய பெண்களே நீங்கள் இந்த ஆடையை எடுத்துக் கொள்ளுங்கள் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை.

ஹிஜாப் என்பது பெண்களுக்கான ஒரு பொது ஆடை, ஒரு பாதுகாப்பு ஆடை இந்நிலையில் சமீபத்தில் கூட ஒரு நடிகை ஹிஜாப் அணிந்துள்ளார். கூறியிருக்கிறார். ஹிஜாப்புக்கு ஒருபோதும் மத அடையாளம் கிடையாது, ஆனால்  எதுவும் தெரியாமல் உளறுவதே குஷ்புவின் வாடிக்கையாக உள்ளது. எதையாவது பேசிவிட வேண்டும் அதன்மூலம் பற்றி எரிய வேண்டும், அந்த தீயில் குளிர் காய வேண்டும் என்பதுதான் மதவாதிகளின் உள்நோக்கமாக உள்ளது. அரசியல் ரீதியாக ஒருபோதும் மத சாயம் பூசக்கூடாது. மொத்தத்தில் இது இஸ்லாத்துக்காக ஆடை என்பதை காட்டிலும் இது அனைவருக்குமான ஒரு பொதுவான ஆடை. குஷ்பு போன்றவர்கள் பல நேரங்களில் பல வகைகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடியவர். அவர் இஸ்லாத்தைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என அந்த அமைப்பு கண்டித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!