நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா..? உளறிக் கொட்டிய தயாநிதி மாறன்..!

By Thiraviaraj RMFirst Published May 14, 2020, 7:24 PM IST
Highlights

உங்களை போல நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா? என திமுக எம்.பி தயாநிதிமாறன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உங்களை போல நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா? என திமுக எம்.பி தயாநிதிமாறன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தலைமை செயலாளர் தங்களை தரக்குறைவாக நடத்தியதாகக் கூறி தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டி.ஆர்.பாலு, ‘’மக்கள் அதிகாரம் பெற்ற எங்களை மூன்றாம் தர மக்களைப்போல நினைத்து செயல்பட்டார் தலைமைச் செயலாளர் சண்முகம். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை? எனக் கூறிய அவர்,  அதற்கு விளக்கம் அளிக்க அருகில் இருந்த தயாநிதி மாறனை அழைத்தார்.

அடுத்து பேசிய தயாநிதிமாறன், ‘’மூன்றாம் தர மக்களாக, வாயில் சொல்ல முடியாத, அதாவது உங்களைப் போன்ற ஆட்களை போன்று எங்களையும் கூறுகிறார். அதாவது தாழ்த்தப்பட்ட ஆட்களை போல நடத்துகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்கள் அதை கவனிக்காமல் அவரது அறையில் தொலைக்காட்சிப் பெட்டி அலறுகிறது. தொலைக்காட்சி சத்தத்தை கூட அவர் குறைத்து வைக்கவில்லை. எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் நடந்துகொண்டார்.

ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்திருக்கிறார். அந்த பொறாமையின் உச்சத்தில் இருந்துள்ளார் தலைமைச் செயலாளர். அந்த பொறாமை முதல்வருக்கு இருக்கிறதோ? இல்லையோ? தலைமைச் செயலாளருக்கு இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. நாங்கள் எடுத்துச்சென்ற கோரிக்கைகள் எங்களுக்கானது அல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கானது. திமுகவை சேர்ந்தவர்களுக்கானது அல்ல. அனைத்துக் கட்சி சார்ந்தவர்களுக்கும், கட்சி சார்பு இல்லாதவர்களுக்குமானது. தேவையான கோரிக்கைகளை முன்வைத்தோம். ஒரு லட்சம் தொழிற்சாலைகளை திறக்க வேண்டும். பேருந்து வசதி விடவேண்டும். ரயில் சேவையை தொடர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அரசாங்கம் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து விட்டோம். இதுபோன்ற சிறு உதவிகளையாவது நீங்கள் செய்யுங்கள் என அவரிடம் கோரிக்கை வைக்க சென்றோம். ஆனால் சண்முகம் எங்களை கீழ்த்தரமாக நடத்தினார்’’என தயாநிதிமாறன் குற்றம்சாட்டினார். 

அவர் பேசிய பேச்சு தற்போது சர்ச்சையாகி உள்ளது. அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் இழிவானவர்களாக எங்களை கருதுகிறார் என தயாநிதிமாறன் கூறியதுதான் தாழ்த்தப்பட்ட மக்களை அவமானப்படுத்துவதை போல உள்ளது. தன்னை தாழ்த்தப்பட்ட மக்களை போல நடத்துவதாக கூறி தாழ்த்தப்பட்ட மக்களை அவமானப்படுத்தி உள்ளார் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

click me!