தேவர் குருபூஜைக்கு பிரதமர் மோடி வராதது ஏன்..? இது தான் காரணமா..? வெளியான பரபரப்பு தகவல்

By Ajmal KhanFirst Published Oct 14, 2022, 4:09 PM IST
Highlights

பிரதமர் நரேந்திர மோடி பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் குருபூஜைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை பாஜக மறுத்துள்ளது. ஒரு சாதியினரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் மற்ற சாதியினர் அதிருப்தி அடைவார்கள்  என்று கூறப்பட்டதால் மோடியின் பயணம் கடைசி நேரத்தில் உறுதியாகவில்லையென கூறப்படுகிறது.
 

தமிழகத்தை கைப்பற்ற திட்டமிடும் பாஜக

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜகவை வளர்க்க முயற்ச்சி மேற்கொண்டது. இதற்காக பல்வேறு தலைவர்களை மாநில தலைவர்களாக நியமித்தது. குறிப்பாக பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்திரராஜன். எல்.முருகன் என நாடார் மற்றும் ஆதி திராவிடர் சமுதாயத்திற்கும் வாய்ப்பு வழங்கியது. இருந்த போதும் பாஜக தமிழகத்தில் நிரந்திர இடத்தை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தான் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிமுகவோடு கூட்டணி அமைத்தது போட்டியிட்டது. அப்போது நாடார் சமுதாய வாக்குகளை பெற்றிடும் வகையில் தென் மாவட்டமான தூத்துக்குடிக்கு தமிழிசையை வேட்பாளராக நிறுத்தியது ஆனால் திமுக வேட்பாளரான கனிமொழி தேர்தலில் வெற்றி பெற்று எம்பியானர்.

ஓ.பி.ரவீந்திரநாத்தை கைது செய்ய வேண்டும்.! தங்க தமிழ் செல்வன் புகார் மனுவால் பரபரப்பு.. என்ன காரணம் தெரியுமா..?

தேவர் குரு பூஜையில் மோடி.?

அதே நேரத்தில் தேர்தலில் தோல்வி அடைந்த தமிழிசை கவர்னர் ஆனார்.  இந்தியாவில் 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜக மற்றும் பாஜக ஆதரவோடு ஆட்சி அமைந்துள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் பாஜக இன்னும் முழுமையாக கால் ஊன்ற முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழகத்தில் பாஜகவின் வெற்றியானது முக்கிய பங்காற்றும் என கூறப்பட்டது.  எனவே தென் மாவட்டங்களில் அதிகமாக வசிக்கும் தேவர், நாடார், ஆதிதிராவிடர்கள் ஓட்டை பெற பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்க்கு முதல் படியாக வருகிற 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் பரவியது. இது அரசியல் கட்சிகளை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் இந்த தகவலை பாஜகவினர் திடீர் என மறுத்துள்ளனர்.

"விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போனதாக சரித்திரம் இல்லை" ஓபிஎஸ்- இபிஎஸ்க்கு திடீர் அறிவுரை வழங்கிய சசிகலா

ஹாட்ரிக் வெற்றி பெற திட்டம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும்போது, இந்த செய்தி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை பொதுவாகவே பிரதமர் வரப்போவது இரண்டு  மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டிருக்கும்.  பிரதமர் தமிழக வரும் திட்டம் இப்போதைக்கு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். எல்லா தலைவர்களின் குரு பூஜைக்கு பிரதமர் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை.  அடுத்த வருடம் குரு பூஜையில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் கோரிக்கை வைப்போம் என அண்ணாமலை கூறியிருந்தார்.இந்தநிலையில் இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

தென்மாவட்ட மக்கள் ஓட்டு யாருக்கு

எனவே பாஜகவின் திட்டங்களை மக்களை கொண்டு செல்லும் வகையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தேவர் குருபூஜைக்கு பிரமர் மோடி தமிழகம் வந்தால் தேவர் சமுதாய மக்களின் ஓட்டுக்களை பெற்றிட முடியும் எனவும், தென் மாவட்டங்களில் பாஜகவை வளர்சிக்கு உதவியாக இருக்கும் நினைத்து இருந்தனர். ஆனால் தற்போது நடைபெறவுள்ள குருபூஜைக்கு மட்டும் பிரதமர் வந்து விட்டு சென்றால் மற்ற சமுதாய மக்கள் அதிருப்தி அடைவார்கள் என இறுதியாக தெரியவந்ததாகவும், இதன் காரணமாகவே பிரதமர் மோடியின் பயணத்தை திட்டமிடாத நிலை ஏற்பட்டதாக கூறினார். குறிப்பாக கடந்த மாதம் இம்மானுவேல் சேகரன் குரு பூஜை நடைபெற்றபோது பிரதமர் வாரமல் தேவர் குரு பூஜைக்கு மட்டும் வந்தால் மற்ற சாதியினரின் ஓட்டுக்களை பெற முடியாமல் போகும் என்ற காரணத்தால் பிரதமர் பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறினர். 

இதையும் படியுங்கள்

7 நிமிடங்களில் வரும் 108 ஆம்புலன்ஸ்..! தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த அன்புமணி

click me!