என்ன நியாயம் இது..? கிஷோர் கே.சுவாமிக்காக கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..!

Published : Jun 15, 2021, 12:41 PM IST
என்ன நியாயம் இது..? கிஷோர் கே.சுவாமிக்காக கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..!

சுருக்கம்

திமுகவை விமர்சித்த கிஷோர் கே.சுவாமியை கைது செய்ததைப்போல பிரதமர் மோடியை விமர்சிப்பவர்களும் கைது செய்யப்படுவார்களா? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார். 

திமுகவை விமர்சித்த கிஷோர் கே.சுவாமியை கைது செய்ததைப்போல பிரதமர் மோடியை விமர்சிப்பவர்களும் கைது செய்யப்படுவார்களா? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுகவின் மறைந்த முன்னாள் முதல்வர்களான சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டதால் சமூக ஊடகவியலாளர் கிஷோர் கே. சுவாமி, சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி அளித்த புகாரில், ஐபிசி 153, 505 (1/B), 505 (1-C)ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிஷோர் கே.சுவாமியை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசிவரும் திமுகவினரும் இதே போல் கைது செய்யப்படுவார்களா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
 
PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?