
பட்டினப்பாக்கத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
முட்டை விவகாரத்தில் ஆபத்து என்ற டிடிவியின் கருத்துக்கு அரசினை தாக்கி பேசுவதும் புழுதி வாரி வீசுவதும் தான் பொழு விடிந்தால் டிடிவிக்கு வேலை, கோழி முட்டைக்கும் ரைடுக்கும் என்ன தொடர்பு உள்ளது?
சில கூமுட்டைகள் இவ்வாறு தான் பேசும். வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்ததால் அவர்கள் ஆய்வு நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கட்டும் என அமைச்சர் ஜெயகுமார் பேசி உள்ளார்.
லோக் ஆயுக்தா சட்டம்
லோக் ஆயுக்தா சட்டம் குறித்து இன்னும் சில மணி நேரங்களில் உங்களின் கேள்விகளுக்கு நல்ல பதில் கிடைக்கும் என்றும், திருநாவுக்கரசர் கூறிய "ஆளும் கட்சி வேண்டுமானால் பாஜக வுடன் கூட்டணி வைக்கும்" என்று கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்..தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் எழ வாய்ப்பேயில்லை என தெரிவித்தார்.
தேர்தல் கூட்டணி
தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி தலைமை முடிவு செய்யும் என்றும், அமித்ஷா வருகை அரசியல் நோக்கம் கொண்டதில்லை ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கேள்விகளுக்கு போதுமான அளவிற்கு நானும் அமைச்சர்களுக்கும் பதில் அளித்து விட்டோம் என்றும் தெரிவித்து உள்ளார்.