டிச.2... ஏசியாநெட் செய்தி துளிகள் ..! நாட்டுல இன்னிக்கு நடப்பது என்ன?
Published : Dec 02, 2017, 01:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
சுருக்கம்
what is happening today
- வேத மந்திரங்கள் முழங்க திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்
- திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: 2,668 அடி உயர மலையில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுகிறது
- மிலாது நபி இன்று கொண்டாட்டம்: கவர்னர், முதல்–அமைச்சர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
- புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. மத்திய நீர்வள ஆணையம் வார்னிங்
- லட்சத்தீவின் மினிகாய் அருகே 80கிமீ தொலைவில் ஓகி புயல்! பலத்த மழை,பேய் காற்றும் வீசுவதால் பீதி
- அரபிக் கடலுக்கு ஷிப்ட்டான 'ஓகி' புயல்... அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்
- கேரளாவை புரட்டிப்போட்ட ஓகி புயல்.. 2 பேரிடர் மீட்புக்குழுக்கள் கொச்சின் விரைவு
- ஓகி புயல் குறித்து ஒன்னுமே சொல்லல.. ஹைதராபாத் வானிலை மையம் மீது கேரள முதல்வர் பாய்ச்சல்
- குமரி மாவட்டத்தில் கடும் கடல் சீற்றம்.. 4 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் கட்
- தனித்தீவான சுசீந்திரம்... மின்சாரம், தொலைதொடர்பு வசதியின்றி மக்கள் அவதி
- சதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளம்... பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
- கொடைக்கானலை மிரட்டும் கனமழை.. முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடல்
- கன்னியாகுமரி முதல் கர்நாடகாவரை நின்று ஆடும் ஓகி.. பெங்களூரிலும் விடிய விடிய மழை
- ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: முதல்வரிடம் பிரதமர் உறுதி
- திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மணி நேரமாக கொட்டிய பலத்த மழை.. வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்
- கேரளாவில் கடலுக்கு சென்ற 218 மீனவர்கள் மீட்பு, உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு
- ஓகி புயல் பாதிப்பு.. தேசிய பேரிடர் மீட்பு படை தலைவருடன் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
- ஒப்பந்தப்படி பணம் தராமல் நழுவும் தமிழக அரசு.. வழக்கு போடுகிறது நிசான் நிறுவனம்! சர்வதேச அளவில் போகப்போகுது மானம்
- ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சென்னை, கொல்கத்தாவில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை
- ஆர்கே நகரில் டிசம்பர் 6ஆம் தேதி முதல் பிரச்சாரம்.. எடப்பாடியார் அறிவிப்பு
- காஷ்மீரில் பயங்கர சாலை விபத்து.. 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலி
- சீனா: அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து - 10 பேர் உடல் கருகி பலி
- சிம்புவால் நடுத்தெருவில் நிற்கிறேன்: ஏஏஏ தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
- இணையத்தில் பெண்கள் குறித்து அவதூறு கருத்து பதிவு செய்வது மானபங்கம் இல்லை: உயர்நீதிமன்றம் விளக்கம்
- 11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய செம்மலை மனு நிராகரிப்பு
- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டி இல்லை என அறிவிப்பு
- ப. சிதம்பரத்தின் உறவினர் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை
- காவிரி விவகாரம்: தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்ய மீண்டும் அனுமதி மறுப்பு
- உ.பி. உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றி; வளர்ச்சி அரசியல் மீண்டும் வெற்றி பெற்றது - பிரதமர் மோடி பெருமிதம்
- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக,திமுக, டிடிவி தினகரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல்
- வேட்புமனு தாக்கலுக்கு முன் ஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி தினகரன் மலர் தூவி அஞ்சலி
- உ.பி உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் முதல் இடத்தில் பா.ஜ.க, 2-வது பிஎஸ்பி, 3வது இடத்தில் காங்கிரஸ்
- உத்தரபிரதேசத்தில் 100 வருடங்களுக்கு பிறகு லக்னோவின் முதல் பெண் மேயராக சன்யுக்தா பாட்டியா தேர்வு
- டெல்லி மேம்பாட்டு ஆணைய பெண் ஊழியருக்கு 2 ஆண்டுகளாக பாலியல் கொடுமை செய்த அதிகாரி மற்றும் 4 ஊழியர்கள் மீது வழக்கு பதிவு
- உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆதர்ஷ் செயின் ஆனந்த் காலமானார்
- பிரதமர் மோடி ஒரு உண்மையான இந்து அல்ல கபில் சிபில் தாக்கு
- சென்னை ஐகோர்ட், புதிய நீதிபதிகளாக எஸ்.ராமதிலகம், ஆர்.தாரணி, பி.ராஜமாணிக்கம், டி.கிருஷ்ணவள்ளி, ஆர்.பொங்கியப்பன், ஆர்.ஹேமலதா ஆகியோர் பதவியேற்பு
- இலவச அரிசி திட்டத்தை நிறுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
- நெல்லை அருகே கட்டிய ஒரே வருடத்திற்குள் இடிந்து விழுந்த ஆற்றுப்பாலம்
- 2016-ல் ஊழல் கட்சியாக தெரிந்த திமுக இப்போது புனிதமாகி விட்டதா?- மார்க்சிஸ்ட் கட்சிக்கு ராமதாஸ் கேள்வி
- 'முதுகெலும்பற்ற அதிமுக; அச்சுறுத்தி பயன்படுத்திக் கொள்ளும் பாஜக': வைகோ சாடல்
- இரட்டை இலை அடிமைகளிடம் இருக்கக் கூடாது: டிடிவி தினகரன்
- நந்தினி டிவி சீரியல் பார்த்து தீ நடனம் ஆடிய சிறுமி பலி - கர்நாடகாவில் சோகம்
- தேர்தல் பணிகள் ஆய்வு: தலைமை தேர்தல் கமிஷனர் இன்று குஜராத் செல்கிறார்
- 20 தமிழக மீனவர்கள் கைது: மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்