திராவிட அரசியல் என்றால் என்ன? விளக்கமளித்து திமுக மானத்தை வாங்கிய ஹெச்.ராஜா..!

By vinoth kumarFirst Published Nov 1, 2020, 2:02 PM IST
Highlights

இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே கிறிஸ்துவ, இஸ்லாமிய மதகூட்டங்களில் பங்கேற்பதும் தான் திராவிட அரசியல் என்று  ஹெச்.ராஜா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
 

இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே கிறிஸ்துவ, இஸ்லாமிய மதகூட்டங்களில் பங்கேற்பதும் தான் திராவிட அரசியல் என்று  ஹெச்.ராஜா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஹெச்.ராஜா பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். அனுபவசாலி.. திறமைசாலி.. எதுவானாலும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான் பேசக்கூடியவர். யாராக இருந்தாலும் நேருக்கு நேர் கேள்வியை தைரியமாக எழுப்புவார். டெல்லி வரை செல்வாக்கு உள்ளவர். இந்நிலையில், திராவிட அரசியல் என்றால் என்ன என்பது குறித்து ஹெச்.ராஜா விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக  ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சாராய ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச் சொல்வதும், 

இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்திய எதிர்ப்பதும்,

கர்நாடகாவிடமிருந்து  தண்ணீர் தரவில்லையென்றால் தமிழ்நாடு தனி நாடு ஆகுமெனச் சொல்லிக்கொண்டே...ஜோலார்பேட்டை தண்ணீர் சென்னைக்கு தரவிடமாட்டோமென்கிறதும்,

தன்னுடைய பிள்ளைகளை பல லட்சங்களை கட்டி பள்ளிகளில் படிக்க வைத்துக்கொண்டே... அதே கல்வியை கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பதும்...

இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே... கிறிஸ்துவ, இஸ்லாமிய மதகூட்டங்களில் பங்கேற்பதும்...

லட்சக்கணக்கான கோடிகளை சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு... ஊழலை நடமாட விடமாட்டோம் என்பது தான் என குறிப்பிட்டுள்ளார்.

click me!