
அதிமுக எம்.எல்.ஏ சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் போலி ஆவணம் தயாரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவது வழக்கம். இதனால் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் எம்.பி.க்கள் அருண் மொழிதேவன், சந்திரகாசி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சத்தியா பன்னீர்செல்வம் , பாண்டியன் , முருகுமாறன், கலைச் செல்வன் ஆகியோர் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.
கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சரியாக மதிப்பதில்லை. தொகுதியில் திட்டங்கள் நிறைவேற்றவிடாமல் தடுக்கிறார். எனவே அவரை அமைச்சர் பதவியில் இருந்தும், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும். கடலூர் மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி தேவையில்லை எனவும் அதிமுக எம்.எல்.ஏ சத்யா குறை கூறிவந்தார்.
இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ சத்தியாவின் கணவர் பன்னீர்செல்வம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது போலி ஆவணம் தயாரித்ததாக பன்னீர் செல்வம் மீது வழக்கு பதியக்கோரி வாராகி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வாராகி புகாரில் முகாந்திரம் இருந்தால் பன்னீர் செல்வம் மீது வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது.