ஓ.பி.எஸ். டீ கொடுத்தார்; முதல்வர் பதவி பறிபோனது! இப்போது எடப்பாடி... என்னவாகுமோ! ஸ்டாலின் நகைச்சுவை!

Asianet News Tamil  
Published : Feb 14, 2018, 02:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
ஓ.பி.எஸ். டீ கொடுத்தார்; முதல்வர் பதவி பறிபோனது! இப்போது எடப்பாடி... என்னவாகுமோ! ஸ்டாலின் நகைச்சுவை!

சுருக்கம்

OPS Gave tea Chief Minister resignation! Now Edappadi ... whatever! Stalin comedy!

ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருக்கும்போது, அவருடன் அமர்ந்து டீ குடித்தேன்; அவரது முதலமைச்சர் பதவி பறிபோனது. தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் டி குடித்து வந்துள்ளேன் என்று மு.க.ஸ்டாலின் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

அண்மையில் தமிழக அரசு உயர்த்திய பேருந்து கட்டணத்தைக் கண்டித்து திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர், தலைமை செயலகத்துக்கு நேரடியாக சென்று முதலமைச்சரிடம் திமுகவின் ஆய்வறிக்கையை நேற்று தந்துள்ளோம். அப்போது துணை முதலமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நான் சென்றதும், காடிப சாப்பிடுகிறீர்களா? டீ சாப்பிடுகிறீர்களா? எனக் கேட்டனர். இப்படித்தான், ஒரு முறை ஓ.பன்னீர்செல்வத்திடம் சென்று டீ சாப்பிட்டேன். உடனே அவர் பதவி பறிபோனது. சிரித்ததற்கும் பதவி போனது. 

நாளைக்கு இவர்களது நிலைமை என்னவென்று எனக்கு தெரியவில்லை. அதனாலேயே ஒரு 15 நிமிடம் உட்கார்ந்து டீ கொடுங்க என கேட்டு குடித்துவிட்டுதான் வந்துள்ளோம் என்று நகைச்சுவையாக கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!