ஒரு வழியா கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க...! ஜெ.விவகாரத்தில் மருத்துவர் பாலாஜி உறுதி...!

Asianet News Tamil  
Published : Feb 14, 2018, 02:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
ஒரு வழியா கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க...! ஜெ.விவகாரத்தில் மருத்துவர் பாலாஜி உறுதி...!

சுருக்கம்

Dr. Balaji confirmed that the Jayalalithaa fingerprint was in the mid-election form

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் படிவத்தில் இருந்தது ஜெயலலிதா கைரேகைதான் என மருத்துவர் பாலாஜி உறுதி செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. 

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் ஆணையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என்று விசாரணை ஆணையம் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தது.

அதைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சரவணன், பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். 

அதில் அத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரின் வேட்புமனுவுடன் வழங்கப்பட்ட ஆவணத்தில் இருந்த கைரேகை ஜெயலலிதாவுடையதுதானா என்பதில்  சந்தேகம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கைரேகை பதிவின்போது உடன் இருந்ததாக தெரிவித்த அரசு மருத்துவர் பாலாஜியை விசாரணை ஆணையம் இரு முறை அழைத்து விசாரித்தது. அதில் மருத்துவர் பாலாஜி கூறிய தகவல்களை அறிக்கையாக அளிக்குமாறு விசாரணை ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. 

அதன் அடிப்படையில் மருத்துவர் பாலாஜி இன்று 3வது முறையாக விசாரணை ஆணையத்தில் ஆஜராகினார்.  

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் படிவத்தில் இருந்தது ஜெயலலிதா கைரேகைதான் என மருத்துவர் பாலாஜி உறுதி செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!