இந்த தேர்தலில் அதிமுக தோற்றால் என்னவாகும்? மனக்குமுறல்களை வெளியிட்ட ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்..!

By vinoth kumarFirst Published Apr 4, 2021, 1:45 PM IST
Highlights

ஜெயலலிதா இருந்தபோது இருந்த கெத்து, கம்பீரம் இப்போது இருக்கிறதா? என்ற மனகுமுறல் உங்களுக்கும் உண்டு எனக்கும் உண்டு. அதிமுக மகளிர் அணியினர் என்ன சொல்கிறார்கள். அம்மா தந்த மரியாதை இப்போது எங்களுக்கு கிடைக்கவில்லை.

ஜெயலலிதா இருந்தபோது இருந்த கெத்து, கம்பீரம் இப்போது இருக்கிறதா? என்ற மனகுமுறல் உங்களுக்கும் உண்டு எனக்கும் உண்டு என்று பூங்குன்றன் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஒரு குடும்பத்திலேயே பல பிரச்னை, ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கத்தில் பிரச்னை இருக்காதா? எனக்கு உறுப்பினர் சீட்டுக்கூட தர மறுக்கிறார்கள். கடுமையான விமர்சனங்கள், பல பிரச்சனைகளை கடந்து நான் வாழ்ந்து கொண்டிருக்கிறனே். ஒவ்வொரு பிரச்சனையின் போதும் என் வீட்டில் சொல்வார்கள் ஒரு பேட்டி கொடுங்கள். அம்மா அவர்களிடம் இருந்து என்னதான் கற்றுக்கொண்டிறீர்கள் என்பார்கள். 

என்னுடைய பேட்டி, கட்சிக்கோ, ஆட்சிக்கோ தொண்டர்களுக்கோ எந்தவிதத்திலும் சங்கடத்தை தந்துவிடக்கூடாது என்பதற்காகவே பேட்டியை தவிர்த்து வருகிறேன். ஒவ்வொரு தொண்டன் வீட்டிலும் மகளுக்கு கட்சி வேலை வாங்கி தரவில்லை, மகனுக்கு வேலை வாங்கி தரவில்லை என்ற ஏக்கம் இருக்கலாம். இவற்றை எல்லாம் கடந்துதான் நாம் பயணித்து கொண்டிருக்கிறோம். 

ஜெயலலிதா இருந்தபோது இருந்த கெத்து, கம்பீரம் இப்போது இருக்கிறதா? என்ற மனக்குமுறல் உங்களுக்கும் உண்டு எனக்கும் உண்டு. அதிமுக மகளிர் அணியினர் என்ன சொல்கிறார்கள். அம்மா தந்த மரியாதை இப்போது எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆட்சி வருவதற்கே ஐடி விங் தான் காரணம் சொன்னவர்கள் எல்லாம் அந்த அணியில் எத்தனை பெயர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். பல அணிகள் ஒதுக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். ஒரு மாவட்டத்தில் ஒருத்தர் வைத்தது தான் சட்டம். அவரை சுற்றி உள்ளவர்கள் வலமாக இருக்கிறார்கள். உழைக்காதவர்களுக்கு பதவி. மாற்று கட்சியில் இருந்து கடுமையாக விமர்சனம் செய்தவர்களுக்கு அன்றைக்கே பதவி.

தேமுதிகவை புறக்கணித்தது கூட என மனகுமுறல்தான். இப்படி ஆயிரம் பிரச்சனைகள் நமக்குள் இருந்தாலும் நம்மை இயக்கம் பெரிது என்று சொன்ன தலைவர்கள் வழியில் வந்தவர்கள் நாம். அவர்கள் வழியில் கட்டாயம் நாம் நடக்கவேண்டும். கழகம் வெற்றிப்பெற்றாகவேண்டும். இல்லையேல் இல்லையேல் என்ன நடக்கும்? என்பதை யாராலும் யூகிக்க முடியாது. 1996ஐ நினைத்து பாருங்கள். கழகம் தோல்வியை சந்தித்தபோது  ஜெயலலிதா என்ற இருப்புபெண்மணி இருந்து கட்சியை நிமிர்த்தினார். இன்று இருப்பவர்கள் நிமிர்த்துவார்களா என்பது சந்தேகமே. எனவே தலைவருக்காக இந்த இயக்கத்தில் நாம் பயணிக்கவில்லை. எந்தவித லாபத்தையும் எதிர்பார்க்காமல் கடைமட்ட தொண்டர்கள் அதிமுகவுக்காக உழைத்துக்கொண்டிருக்கின்றனர். 

 100 ஆண்டுகள் கடந்து இயக்கம் வாழ வேண்டுமென்ற ஜெயலலிதாவின் கனவு மெய்பட வேண்டும். அதற்கு  தொண்டர்களும், அவர்கள் குடும்பத்தினரும் சிதறாமல் பெற்று தர வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும். எனவே வாக்களிப்போம் புரட்சித்தலைவரின் வெற்றி சின்னத்திற்கு, வாக்களிப்போம் எனது தாய் நம்மால் அம்மா என்று அன்போடு அழைக்கப்படும் மனித புனிதவதி பாடுபட்டு வளர்த்த இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்போம் என்று கூறியுள்ளார்.

click me!