புல்லட் ரயிலொன்று டவுன் பஸ்ஸான கதை: என்னாச்சு நம்ம மோடிக்கு?

Asianet News Tamil  
Published : Nov 01, 2017, 08:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
புல்லட் ரயிலொன்று டவுன் பஸ்ஸான கதை: என்னாச்சு நம்ம மோடிக்கு?

சுருக்கம்

what happened to modi bullet rail becomes town bus

சர்வதேச நாடுகளின் சிறப்பு வாய்ந்த பொதுமேடை அரங்குகளில் மோடி நின்றிடாத மேடைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ‘நான் இந்தியன்’ எனும் செருக்குடன் எந்த தேசத்தின் அதிகாரமிகு மேடையிலும் சிங்கம் போல் நின்று உரையாற்றியவர். 

அப்பேர்ப்பட்ட சிங்கத்துக்கு திடீரென என்னாச்சு? என்று அவரது கட்சி வி.வி.ஐ.பி.க்களே நெற்றியை சுருக்கும் வண்ணம் சூழல் நகர்ந்து கொண்டிருக்கிறது. 

மைக்ரோ செகண்டுகளில் சீறிப்பாயும் புல்லட் ரயில் திடீரென டவுன் பஸ் போல் லோக்கலாய் ஓடினால் எப்படியிருக்கும்?! அப்படித்தான் கடந்த சில நாட்களாக மோடி பேசிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் விமர்சகர்கள்.

அதற்கான ஆதாரங்களாக அவர்கள் சுட்டிக்காட்டும் விஷயங்கள்....
“காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து  வழங்கப்பட வேண்டும் என்ரு கோரிக்கை எழுந்திருக்கும் விஷயத்தில், அதற்கு சப்போர்ட் செய்யும் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை நோக்கி ‘இப்படியெல்லாம் பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா?’ என்று போட்டுப் புரட்டினார் மோடி. 

அதேபோல் குஜராத்தில் தான் முதல்வராக இருந்தபோது அம்மாநில வளர்ச்சிக்காக தான் திட்டமிட்ட பல அருமையான திட்டங்களை அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு நிறைவேற்றவிடாமல் முட்டுக்கட்டை போட்டது என்று சில நாட்களுக்கு முன்னர் குற்றம் சாட்டினார்.

இந்தியாவிலேயே வளர்ச்சி மற்றும் அனைத்து அம்சங்களிலும் முதன்மை மாநிலமாக குஜராத்தை ஆக்கியிருக்கும் மோடிக்கு வாக்களித்தால் இந்தியாவை அதேபோல் வளர்ச்சியடைய செய்வார் என்று சொல்லித்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு கேட்டது பி.ஜே.பி. ஆட்சியை பிடித்து மூன்றாகிவிட்ட நிலையில் மோடி இப்படியொரு குற்றச்சாட்டை சொல்லி ஜகா வாங்குவது ‘அப்போ அன்னைக்கு சொன்னது பொய்யா? இது திண்டுக்கல் சீனிவாசன் கதையால்ல இருக்கு!’ என்று மக்களே கிண்டலாக விமர்சிக்கிறார்கள். 

இப்போது சர்தார் வல்லபாயின் 142 வது ஆண்டுவிழாவிலும் இப்படி அந்த நிகழ்வை புகார் மழையில் நனையவிட்டிருக்கிறார். 

அதாவது ‘இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் படேல் மிகவும் உறுதியாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் நாடு ஒன்றானது. ஆனால் அவர் மேற்கொண்ட முயற்சிகள், அதனால் கிடைத்த பலன்கள், மக்களை அடையக்கூடாது என்றும், படேலின் பெருமையை, பெயரை மறக்கடிக்க வேண்டும் என்றும் சில அரசுகள், கட்சிகள் முயற்சித்தன. மக்களை அவ்வளவு சுலபமாக ஏமாற்ற முடியாது. அவர்களின் மனங்களில் படேலின் பெயர் நிலைத்துள்ளது.” என்று பேசியிருக்கிறார். 

ஆக இப்போதெல்லாம் மோடி உள்நாட்டில் எங்கே உரையாற்றினாலும் அதில் எதிர்கட்சிகளை, அதிலும் குறிப்பாக பிரதான எதிர்கட்சியான காங்கிரஸை கழுவி ஊற்றுவதிலேயே குறியாக இருக்கிறார். 

இது தன் ஆட்சி விமர்சனத்துக்கு ஆளாகிறது என்று நினைப்பதால் வந்ததன் விளைவா அல்லது  குஜராத்தில் தேர்தல் வைபரேஷன் துவங்குவதால் வந்த விளைவா? என்று புரியவில்லை.” என்கிறார்கள். 
மக்களுக்கும்தான் புரியவில்லை!

PREV
click me!

Recommended Stories

Durga Puja: துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவா? VHP என்ன சொல்கிறது!
Free Training: விவசாயிகள், இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! தமிழ்நாடு அரசு தரும் இலவச பயிற்சி.! இனி லாபம் கொட்டப்போவது உறுதி.!