திராவிட அரசியல்னா என்னென்னு தெரியுமா..? பட்டியல் போட்டு மானத்தை வாங்கிய எச்.ராஜா..!

Published : Dec 03, 2019, 01:43 PM IST
திராவிட அரசியல்னா என்னென்னு தெரியுமா..? பட்டியல் போட்டு மானத்தை வாங்கிய எச்.ராஜா..!

சுருக்கம்

திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் குறித்து அவ்வப்போது எச்.ராஜா கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், பாஜக தேசிய செயலர் எச்.ராஜா திராவிட அரசியல் என்பது என்ன என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக ஒரு பதிவிட்டுள்ளார். அதில், இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே... கிறிஸ்துவ, இஸ்லாமிய மதகூட்டங்களில் பங்கேற்பதும்... சாராய ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச் சொல்வதும், இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்தியை எதிர்ப்பதும்

பேசுவதற்கு நேர்மாறாக கேவலமாக அரசியல் செய்வது தான் திராவிட அரசியல் என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் குறித்து அவ்வப்போது எச்.ராஜா கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், பாஜக தேசிய செயலர் எச்.ராஜா திராவிட அரசியல் என்பது என்ன என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக ஒரு பதிவிட்டுள்ளார். அதில், இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே... கிறிஸ்துவ, இஸ்லாமிய மதகூட்டங்களில் பங்கேற்பதும்... சாராய ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச் சொல்வதும், இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்தியை எதிர்ப்பதும்,

கர்நாடகாவிடமிருந்து  தண்ணீர் தரவில்லையென்றால் தமிழ்நாடு தனி நாடு ஆகுமெனச் சொல்லிக்கொண்டே... ஜோலார்பேட்டை தண்ணீர் சென்னைக்கு தரவிடமாட்டோமென்கிறதும், தன்னுடைய பிள்ளைகளை பல லட்சங்களை கட்டி பள்ளிகளில் படிக்க வைத்துக்கொண்டே...

அதே கல்வியை கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பதும்... லட்சக்கணக்கான கோடிகளை சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு...ஊழலை நடமாட விடமாட்டோம் என்பதும் தான் திராவிட அரசியல்! என்று பதிவிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!