ஜெ.மரணத்திற்கு நீதிகிடைக்காத இந்த ஆட்சியில் மக்களுக்கா? நீதிகிடைக்க போகுது.! உதயநிதி ஓபிஎஸ் இபிஎஸ்மீது அட்டாக்

Published : Oct 18, 2020, 10:39 PM IST
ஜெ.மரணத்திற்கு நீதிகிடைக்காத இந்த ஆட்சியில் மக்களுக்கா? நீதிகிடைக்க போகுது.! உதயநிதி ஓபிஎஸ் இபிஎஸ்மீது அட்டாக்

சுருக்கம்

ஜெ மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் 9வது முறையாக காலநீட்டிப்பு கேட்கிறது. சிறு பெட்டிகேஸில் கூட புகார்தாரர் விசாரணைக்கு வரவில்லையெனில் அவரே சந்தேகிக்கப்படுவார். அப்படி ஜெ மரணத்துக்கு நிதிகேட்டு தர்மயுத்தம் செய்தவர் ஒருமுறைக்கூட விசாரணைக்கு ஆஜராகாத மர்மமென்ன?என கேள்வியெழுப்பியிருக்கிறார் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணைத்திற்கு 8-வது முறையாக கொடுக்கப்பட்ட கால அவகாசம் வரும் அக்டோபர் 24ஆம் தேதியோடு முடிவடையவுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும்,வழக்கு விசாரணையில் ஏற்படும் காலதாமதத்தால், ஆணையத்தின் காலக்கெடுவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யக்கோரியும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பதிவில், “ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்தபோதும் இறந்தபோதும் விஜயபாஸ்கரே சுகாதார அமைச்சர். அன்று முதல்வராக இருந்தவர் இன்று துணைமுதல்வர். அன்று அமைச்சராக இருந்தவர் இன்று முதல்வர். ஜெ.மரணத்தின் மர்மம் இவர்களை தாண்டியா மற்றவர்களுக்கு தெரிந்திருக்கப்போகிறது என்பதே மக்களின் கேள்வி.

ஆனால், ஜெ மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் 9வது முறையாக காலநீட்டிப்பு கேட்கிறது. சிறு பெட்டிகேஸில் கூட புகார்தாரர் விசாரணைக்கு வரவில்லையெனில் அவரே சந்தேகிக்கப்படுவார். அப்படி ஜெ மரணத்துக்கு நிதிகேட்டு தர்மயுத்தம் செய்தவர் ஒருமுறைக்கூட விசாரணைக்கு ஆஜராகாத மர்மமென்ன?ஆணையம் ஏன் இதை கண்டுகொள்ளவில்லை. இவர்களை அடையாளம்காட்டிய ஜெ. மரணத்துக்கே இந்த அடிமைகள் ஆட்சியில் நீதி கிடைக்காதபோது மக்களுக்கா நீதி கிடைத்துவிடப்போகிறது? அடுத்த 6 மாதத்தில் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமையும் ஆட்சியில் ஜெ. மரணத்திற்கு நிச்சயம் நீதிகிடைக்கும். இது உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!