அந்த விஷயத்தில் சிம்புவை தூக்கி சாப்பிட்ட கமல்...!! தயாரிப்பாளர் சங்கத்தில் பகீர் புகார்...!!

Published : Sep 26, 2019, 11:30 AM IST
அந்த விஷயத்தில் சிம்புவை தூக்கி சாப்பிட்ட கமல்...!! தயாரிப்பாளர் சங்கத்தில் பகீர் புகார்...!!

சுருக்கம்

உத்தமவில்லன் படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் , நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை

உத்தம வில்லன் பட வெளியீட்டின் போது, தன்னிடம் வாங்கிய 10 கோடி ரூபாய் பணத்தை நடிகர் கமல்ஹாசன் நான்கு ஆண்டுகள் ஆகியும் திரும்பித் தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். 

உலகநாயகன் கமல் யார் என்பது ஊருக்கே தெரியும், சினிமாவில் பெயர் வாங்கியதைவிட, ஆவர் கட்சி ஆரம்பித்து பெயர் வாங்கியதைவிட , பிக்பாஸில் வீட்டு போட்டியாளர்களுக்கு நல்வழி போதித்து அதன் மூலம் வாங்கிய பெயர் அதிகம். காரணம் அவரின் பேச்சில் அவ்வளவு நியாயம், அவ்வளவு நேர்மை இருக்கும் என்பது தான். அப்படிப்பட்ட கமல் ஹாசன் மீது  இப்போது எழுந்துள்ள புகார் மிகப்பெரியது, அவரின் ஒட்டு மொத்த புகழுக்குமே கலங்கம் விளைவிக்க கூடியது. ஆம்,

 

கடந்த 2015 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் உருவான உத்தமவில்லன் படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் , நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை எனவும், 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் மீது பிரபல சினிமா தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா கொடுத்திருக்கும் இந்த புகார், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!