இடதுசாரிகள், கொங்கு கட்சிக்கு மட்டும் ரூ.40 கோடியா? விசிக, மதிமுக அதிர்ச்சி, அதிருப்தி..!

By Selva KathirFirst Published Sep 26, 2019, 10:29 AM IST
Highlights

இடதுசாரிகள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ரூ.40 கோடி திமுக தேர்தல் செலவுக்கு அதிகாரப்பூர்வமாக கொடுத்துள்ளதாக வெளியான செய்தி மற்ற கூட்டணி கட்சிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இடதுசாரிகள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ரூ.40 கோடி திமுக தேர்தல் செலவுக்கு அதிகாரப்பூர்வமாக கொடுத்துள்ளதாக வெளியான செய்தி மற்ற கூட்டணி கட்சிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் செலவுக் கணக்குகளை திமுக தாக்கல் செய்திருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமாக 70 கோடி ரூபாய் தேர்தல் செலவு என்று திமுக கணக்கு காட்டியுள்ளது. இதில் சுமார் 40 கோடி ரூபாயை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு நன்கொடையாக கொடுத்திருப்பதாக திமுக தெரிவித்துள்ளது.

அதிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரு.15 கோடி, மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சிக்கு ரு.10 கோடி, கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ரூ.15 கோடி என மொத்தம் 40 கோடி ரூபாயை 3 கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்திருப்பதாக ஆவணங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட பணம் குறித்த விவரம் இடம்பெறவில்லை.

சொல்லப்போனால் திமுக இடதுசாரிகளுக்கும், கொங்கு கட்சிக்கும் நன்கொடை கொடுத்த தகவலே திருமாவளவன் மற்றும் வைகோவுக்கு நேற்று தான் தெரியவந்துள்ளது. இதனை பார்த்து ஒரு கட்டத்தில் இருவருமே அதிர்ந்ததாக சொல்கிறார்கள். வெறும் மூன்று தொகுதிக்கு 40 கோடி ரூபாய் என்றால் என்ன கணக்கு என்று அவர்கள் குழம்பியுள்ளனர்.

அதே சமயம் தங்களுக்கு தொகுதிக்கு ஒரு கோடி ரூபாய் கூட முழுவதமாக வந்து சேரவில்லையே என்று அவர்கள் இருவரும் புலம்பியதாகவும் கூறுகிறார்கள். இதனிடையே தேர்தல் செலவை பிரித்துக் காட்ட வேண்டும் என்பதற்காகவே 40 கோடி ரூபாயை மூன்று கட்சிகளிடமும் கொடுத்ததாகவும் இது தனிப்பட்ட முறையில் அந்த கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டது அல்ல என்று திமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் 40 கோடி ரூபாயை கொடுத்த தகவலை தங்களிடமும் கூறியிருந்தால் அதற்கு ஏற்ப செலவை தாங்களும் கவனித்திருப்போம் அல்லவா என்று மதிமுக, விசிக தரப்பில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளையும் சமமாக பாவிக்கவில்லை என்றால் எப்படி என்றும் ஆதங்கம் வேறு படுகிறார்களாம்.

click me!