விஜயகாந்தை விட வடிவேலுக்கு இன்னும் மவுசு அதிகம்... தே.மு.தி.க.வின் தெனாவெட்டை அடித்து நொறுக்கிய தினகரன்!

By Vishnu PriyaFirst Published Feb 3, 2019, 5:42 PM IST
Highlights

காரணமே இல்லாம விஜயகாந்துக்கு ஓட்டு குவிஞ்ச காலமெல்லாம் மலையேறிப்போச்சு. அவரை விட இப்பவும் வடிவேலுக்கு மவுசு இருக்குது. அந்தாளை கூட்டிட்டு வந்து பிரசாரம் பண்ண வெச்சாலும் எக்ஸ்ட்ரா நாலு ஓட்டு விழுமுன்னு அண்ணன் சொல்லிட்டாருப்பே! தேய்ஞ்சு போயி கிடக்கிற தே.மு.தி.க.வுக்கு இம்புட்டு தெனாவெட்டு தேவையா?

அமெரிக்காவில் இருந்து திரும்புவதற்குள் அ.தி.மு.க - பி.ஜே.பி. கூட்டணியில் அங்கம் வகிப்பதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எப்படியாவது வெளியிட்டுவிட வேண்டும் என்று துடித்தார் பிரேமலதா. இதற்காக பி.ஜே.பி. சைடில் பேசிப்பார்த்தபோது, ‘தமிழகத்தில் அ.தி.மு.க.தான் கூட்டணி தலைவர். அங்கே பேசி ஓ.கே. வாங்குங்க, எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.’ என்றார்கள். 

அதனால் அ.தி.மு.க. சைடில் பேசியது தே.மு.தி.க. தரப்பு. ‘இனி அரசியலில் தே.மு.தி.க.வுக்கு கடும் சரிவு மட்டுமே!’ என்று ஜெயலலிதாவின் வாயால் சாபம் வாங்கிக் கட்டிய கட்சி என்பதால் வெகுவாக யோசித்தது அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பு குழு டீம். ஒரு கட்டத்தில், ‘அம்மா இருக்கும்போதே நாக்கை துருத்துன அந்தாளை எதுக்குங்க சேர்க்கணும்?’ என்று சில தெற்கத்தி அமைச்சர்கள் சவுண்டு விட்டனர். ஆனால் ‘பழைய சம்பவங்களை பார்த்துட்டே இருக்க கூடாது. பாவம் இப்ப ரொம்ப தளர்ந்துட்டார்.’ என்று கொங்கு அமைச்சர்கள் சிலர் ஆதரவு காட்டினராம் கேப்டனுக்கு.

 

ஆனால், தெற்கத்தி அமைச்சர் ஒருவர் விடாமல், “அவரு தளர்ந்துட்டார். ஆனா அவரு வீட்டம்மா வைக்கப்போற கண்டிஷன்ல நீங்க டென்ஷனாகாட்டி என்னோட ஒத்த காதை அறுத்துக்குறேன்” என்றாராம். அவர் சொன்னது அப்படியே பலித்திருக்கிறது. கூட்டணியில் இணைந்த பிறகு சில விஷயங்களை தங்களுக்கு ஓ.கே. செய்து தரவேண்டும் என்று தே.மு.தி.க.வின் பொருளாளர் வைத்த கோரிக்கைகள் அ.தி.மு.க. தலைமைக்கு பெரும் கோபத்தை கிளப்பிவிட்டன. விளைவு, கேப்டனுடன் கூட்டணியை கிடப்பில் போட்டுவிட்டது ஆளுங்கட்சி. 

உசுப்பிப் பார்த்தும் அங்கிருந்து எந்த பதிலும் வராத காரணத்தால் அடுத்த முயற்சியாக தினகரனுடன் கைகோர்க்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறது தே.மு.தி.க. தரப்பு. எடுத்த எடுப்பில் அங்கேயிருந்து நட்பு ரியாக்‌ஷன் வர, குஷியானவர்கள் அ.தி.மு.க.விடம் வைத்ததில் பாதியளவு குறைத்துக் கோரிக்கையை வைத்தனராம். இது அப்படியே தினகரனுக்கு பாஸ் செய்யப்பட்டிருக்கிறது. 

ஆளுங்கட்சி அடைந்த டென்ஷனை விட பத்து மடங்கு அதிக டென்ஷனான தினகரன், சொல்லிய வார்த்தைகள் தே.மு.தி.க.வின் காதுகளுக்குப் போக மிக மிக மோசமாக மனம் நொந்துவிட்டார்கள். அப்படி என்ன சொன்னார் தினா? என்று அ.ம.மு.க. நிர்வாகிகளிடம் கேட்டால்... “காரணமே இல்லாம விஜயகாந்துக்கு ஓட்டு குவிஞ்ச காலமெல்லாம் மலையேறிப்போச்சு. அவரை விட இப்பவும் வடிவேலுக்கு மவுசு இருக்குது. அந்தாளை கூட்டிட்டு வந்து பிரசாரம் பண்ண வெச்சாலும் எக்ஸ்ட்ரா நாலு ஓட்டு விழுமுன்னு அண்ணன் சொல்லிட்டாருப்பே! தேய்ஞ்சு போயி கிடக்கிற தே.மு.தி.க.வுக்கு இம்புட்டு தெனாவெட்டு தேவையா? அதாம் தலைவரு தலையில தட்டிட்டாருப்பே” என்கிறார்கள். கேப்டன் அமெரிக்காவுல இருந்து வரட்டும், அப்புறம் வெச்சுக்கலாம் கச்சேரிய.

click me!