ஸ்கூல்ல டாய்லெட் நாத்தம் தாங்கமுடியல! ஆனா நாசா போக ஒரு லட்சம் கொடுக்குறாராம்! செங்கோட்டையனை வெளுத்தெடுக்கும் விமர்சனம்

By Vishnu PriyaFirst Published Feb 3, 2019, 5:32 PM IST
Highlights

இதையெல்லாம் மாத்துறதுக்கு வழியில்லை, ஆனால் தனியார் நிறுவனம் ஏத்துக்கிட்ட செலவுக்கு ஒரு லட்சம் நானும் தர்றேன்னு சொல்றது, செங்கோட்டையன் அப்படிங்கிற தனி மனுஷனுக்கு வேணும்னா கைதட்டலை வாங்கித் தந்திருக்கலாம். 

ஒரு தனியார் பத்திரிக்கை நிறுவனம் நடத்திய வினாடி வினா போட்டியில் வென்ற இரண்டு மாணவர்கள் அமெரிக்காவில் இருக்கும் ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையத்தை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த செலவை சம்பந்தப்பட்ட நிறுவனமே ஏற்பதாக தகவல். 

ஆனாலும் இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பதாக சொல்லி ஊக்கப்படுத்தியுள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். இந்த செய்தி, பரவியதும் அமைச்சரை விமர்சனத்தில் வெளுக்க துவங்கியுள்ளனர் நெட்டிசன்கள். அதில்...”மாநிலத்துல உள்ள பல நூறு பள்ளிக்கூடங்கள்ள டாய்லெட் இல்லை, அப்படியே இருந்தாலும் கூட அதை ஒழுங்கா கழுவி பராமரிக்க துப்புரவு பணியாளர்களும் இல்லாம சர்வமும் நாறிப்போயி கெடக்குது. இதைத்தான் அவசரத்துக்கும், ஆத்திரத்துக்கும் பயன்படுத்திக்கிட்டு மோசமான நோய் தாக்குதலுக்கு ஆளாகித் தவிக்கிறாங்க பிள்ளைகள். 

தென் தமிழகம் பக்கம் பல நூறு பள்ளிக்கூடங்கள்ள சத்துணவு சமைக்க கூட நல்ல தண்ணீர் கிடைக்கிறதில்லை. போர் வாட்டரை பக்கத்துல கடன் வாங்கி, உப்புச்சோறை பிள்ளைகளுக்கு போட்டுக்கிட்டு இருக்கிறாங்க பாவப்பட்ட ஆயாக்கள். பாலர் வகுப்புகளில் தூய்மை பணியாளர்கள் இல்லாததால சிறுநீரும், மலமும் கழிச்சுட்டு அப்படியே புழுதியில் கெடந்து உருளுதுங்க குழந்தைங்க. சக குழந்தையின் கழிவு நாத்தத்துக்கு நடுவுலதான் அடுத்த குழந்தை உயிர் வாழுது. 

இதையெல்லாம் மாத்துறதுக்கு வழியில்லை, ஆனால் தனியார் நிறுவனம் ஏத்துக்கிட்ட செலவுக்கு ஒரு லட்சம் நானும் தர்றேன்னு சொல்றது, செங்கோட்டையன் அப்படிங்கிற தனி மனுஷனுக்கு வேணும்னா கைதட்டலை வாங்கித் தந்திருக்கலாம். ஆனால் ஒரு கல்வித்துறை அமைச்சரா நீங்க கவலைப்படணும் சார்.” என்றிருக்கிறார்கள். அம்மாடியோவ்!...

click me!