சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவை வரவேற்கிறோம்... கே.எஸ்.அழகிரி அதிரடி சரவெடி..!

By vinoth kumarFirst Published Jan 21, 2021, 4:04 PM IST
Highlights

கமல்ஹாசன் தனித்து போட்டியிடுவது, பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பாக அமையும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

கமல்ஹாசன் தனித்து போட்டியிடுவது, பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பாக அமையும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

கோவையில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவை மேற்கு மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் எங்களுக்கான தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெறுவோம். கமல்ஹாசன் தனித்து போட்டியிடுவது, பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பாக அமையும். மத சார்பின்மை பேசும் கட்சிகள் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும். வெற்றி வாய்ப்பு மற்றும் சூழலுக்கு ஏற்ப காங்கிரஸ் தொகுதிகளை கேட்கும். 

மேலும், சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள பாஜக வற்புறுத்துவதாக தகவல் வருகிறது. அதிமுகவில் யாரை சேர்க்க வேண்டும் என வேறு கட்சி முடிவு செய்யும் நிலையில் தான் எம்ஜிஆர் துவங்கிய அதிமுக உள்ளது. சசிகலா வருகையால் அரசியலில் மாற்றம் எதுவும் ஏற்படாது. சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவை வரவேற்கிறோம்.

 கமல்ஹாசனால் திமுக கூட்டணியின் ஓட்டுவங்கி பாதிக்கப்படாது. ராஜூவ் குற்றவாளிகளை விடுதலை செய்வது நீதிமன்றம் முடிவு செய்யட்டும். நீதிமன்றம் விடுதலை செய்தால் அதை காங்கிரஸ் எதிர்க்காது ஏற்றுக்கொள்வோம் என கே.எஸ்.அழகிரி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

click me!