பாஜகவை வீழ்த்திய ஸ்டாலின்…. தேசிய அளவில் டிரெண்டிங் ஆன  #WelcomeStalin ஹேஷ்டேக்….

 
Published : Jul 17, 2018, 09:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
பாஜகவை வீழ்த்திய ஸ்டாலின்…. தேசிய அளவில் டிரெண்டிங் ஆன  #WelcomeStalin ஹேஷ்டேக்….

சுருக்கம்

welcome stalin hashtag trending

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்து நாடு திரும்பியதை கிண்டல் செய்து பாஜகவினர் பதிவு செய்த #GoBackStalin  என்ற ஹேஷ்டேக்குக்கு  போட்டியாக திமுகவினர் பதிவு செய்த  #WelcomeStalin என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது #GobackModi  என்ற ஹேஷ்டேக் உலக அளவில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது. அதேபோல் பாஜக தலைவர் அமித்ஷா தமிழகம் வந்தபோது  #GobackAmitshah  டிரெண்டானது. 

இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடந்த 9-ம் தேதி இரவு தனது மனைவியுடன்  லண்டன் சென்றார். லண்டனில் மு.க.ஸ்டாலின் சுமார் ஒருவார காலம் தங்கியிருந்து அதன்பின்னர் இன்று சென்னை திரும்புகிறார்.

ஸ்டாலின் லண்டனில் இருந்து நாடு திரும்புவதை ஒட்டி பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் #GoBackStalin (திரும்பிப்போ ஸ்டாலின்) என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்

மோடி மற்றும் அமித்ஷா வருகையை ஒட்டி #GoBackModi மற்றும் #GoBackAmitShah ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரண்ட் ஆனதற்கு திமுக காரணம் என கருதி பாஜக இன்று ஸ்டாலினை எதிர்த்து கருத்து பதிவிட்டனர்.

ஆனால், #GoBackStalin-க்கு போட்டியாக திமுகவினர் #WelcomeStalin என்ற ஹேஷ்டெக்கை டிரெண்ட் செய்ய தற்போது தேசிய அளவில் அந்த ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது. சுமார் 46 ஆயிரம் ட்விட்கள் #WelcomeStalin என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவிடப்பட்டுள்ளன. இரு தற்போது தேசிய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு