மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின் அரசு.. பாராட்டி தள்ளிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!

By vinoth kumarFirst Published Jul 31, 2021, 7:29 PM IST
Highlights

காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை கொடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவின் அறிவிப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை கொடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவின் அறிவிப்புக்கு  தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால், அனைத்து காவலர்களுக்கும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதன்படி நேற்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்;- காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணி காக்க ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடும் வகையிலும், வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

பணியில் ஈடுபடும் வார விடுமுறை தேவைப்படாத காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும். காவலர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில், அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும். தமிழக காவல் துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தி, மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக, சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு காவலர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இந்நிலையில், காவலர்களுக்கு விடுமுறை அறிவித்த டிஜிபி சைலேந்திர பாபுவுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எனது பாராட்டுக்கள் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழக காவல்துறையின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வாரத்தில் ஒருநாள் மற்றும் பிறந்தநாள், திருமண நாளில் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். காவலர்களுக்கு விடுமுறை அறிவித்த டிஜிபி சைலேந்திர பாபுவுக்கும், தமிழக அரசுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

click me!