அந்த மண்வெட்டியை கொடுப்பா.. கோவை செம்மொழி பூங்காவில் களத்தில் இறங்கிய அமைச்சர்.. மிரண்டு போன அதிகாரிகள்.!

By vinoth kumarFirst Published Jul 31, 2021, 7:00 PM IST
Highlights

கோவை வரதாராஜபுரம் உலக செம்மொழி மாநாடு பூங்காவில் ஆய்வு நடத்த வந்த போது அங்கு வளர்ந்துயிருந்த களைகளை மம்முட்டியால் வெட்டி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சுத்தம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. 

கோவை வரதாராஜபுரம் உலக செம்மொழி மாநாடு பூங்காவில் ஆய்வு நடத்த வந்த போது அங்கு வளர்ந்துயிருந்த களைகளை மம்முட்டியால் வெட்டி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சுத்தம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றத்தில் இருந்து தனது அதிரடி நடவடிக்கை, தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் அறிவிப்புகளால் அலறவிட்டு வருகிறார்.  மறுபுறம் அமைச்சர்களும் அவரவர் துறைகளில் பல்வேறு சீர் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறனர். குறிப்பாக தனது துறையை சார்ந்த அலுவலகங்களில் திடீர் ஆய்வு செய்து பல்வேறு திடீர் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். மாவட்டந்தோறும் திடீர் ஆய்வுகளை நடத்தி 11 மணி ஆனாலும் அலுவலகம் பக்கமே தலை வாக்காத ஊழியர்களை 10 மணி அடித்தாலே அலுவலகத்திற்கு போய்விட வேண்டும் என எண்ணும் அளவிற்கு அதிரடி காட்டி வருகின்றனர். 

அதேபோல், குடும்ப அட்டை விண்ணப்பித்தால் மாத கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது திமுக ஆட்சியில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த 15 நாட்களில் தகுதியுள்ளவர்களுக்கு குடும்ப அட்டை, கொரோனா தடுப்பூசி கோரியும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு  உள்ளிட்ட அனைத்து துறைளிலும் மக்களை கவரும் வகையில் அதிரடி புரட்சிகளை அமைச்சர்கள் ஏற்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில், கோவையில் வ.உ.சி., பூங்கா, காந்திபார்க், 10 பைசா பார்க் போன்றவை மக்கள் நெஞ்சம் நிறைந்தவை.  இவை தவிர, செம்மொழி மாநாடு நினைவாக, ஏராளமான பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. சமீபத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' நிதியில், பல லட்சம் ரூபாய் செலவழித்து சில பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. பூங்காக்கள் பலவும் போதிய பராமரிப்பின்றி காணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனை ஆய்வு செய்ய அமைச்சர் சக்கரபாணி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் சென்றார். அப்போது செம்மொழி பூங்காவில், மரக்கிளைகள் ஒடிந்து கிடந்தன. குவியல் குவியலாக சறுகுகள் காணப்பட்டன. பறவைகளின் எச்சங்கள் தென்பட்டன.

செம்மொழி பூங்காவில் செடிகளை களை எடுத்த அமைச்சர்.

கோவை வரதாராஜபுரம் உலக செம்மொழி மாநாடு பூங்காவில் வளர்ந்துயிருந்த செடிகளை மம்முட்டியால் வெட்டி சுத்தம் செய்தார் அமைச்சர் . உடன் மாவட்ட ஆட்சியர் , மாநகராட்சி ஆணையர் உடனிருந்தனர். pic.twitter.com/j9k1QEsFaX

— கார்த்திக் சதிஸ்குமார் (@kovaikarthee)

 

 உலக செம்மொழி மாநாடு நடந்ததன் நினைவாக கட்டப்பட்ட பூங்காவின் நிலையைக் கண்ட அமைச்சர் கொதித்தெழுந்தார். பூங்காவில் வளர்ந்துயிருந்த களைகளை அகற்றுவதற்காக தானே மண்வெட்டியை கையில் எடுத்து வெட்டி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியே சுத்தம் செய்தார். அப்போது, அதிகாரிகள் முள்ளு செடி இருக்கு சொல்லியும்  அதை கண்டு கொள்ளாமல் சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். இது தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது.

click me!