சொத்து வரி, வீட்டு வரியை கடுமையாக உயர்த்தியது தமிழக அரசு…. எத்தனை சதவீதம்னும் தெரிஞ்சா கடுப்பாயிடுவீங்க !!  

 
Published : Jul 24, 2018, 06:57 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
சொத்து வரி, வீட்டு வரியை கடுமையாக உயர்த்தியது தமிழக அரசு…. எத்தனை சதவீதம்னும் தெரிஞ்சா கடுப்பாயிடுவீங்க !!  

சுருக்கம்

wealth tax hike by 100 percentage in tamil nadu

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து 100 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதால்  பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது இடத்திற்கேற்ப சொத்து வரி விதிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்பட்டு வருகிறது.  முறைப்படி 2008க்கு பின் சொத்து வரி ஏற்றப்படவில்லை.

சிலஉள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரிஅவ்வப்போது உயர்த்தப்பட்டது. பல பகுதிகளில் சொத்து வரி வசூலிக்கப்படாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்குபெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பான வழக்கு அண்மையில்  நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுத்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி குடியிருப்பு பகுதி, வாடகை குடியிருப்பு பகுதி, குடியிருப்பு அல்லாத பகுதி என மூன்று விதமாக சொத்து வரி விதிக்கப்படஉள்ளது.

அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சொத்து வரி 50 சதவீதம்; வாடகை குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம்; குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் 'ஏ, பி, சி' என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, சதுர அடி முறையில் தனித்தனியே சொத்து வரி விதிக்கப்பட்டு உள்ளது.அவை அனைத்தும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. புதிய சொத்து வரி நடப்பு ஆண்டு முதல் வசூலிக்கப்படும் கெ தமிழக அரசு அறிவித்துள்ளது.

.தமிழகத்தில் சொத்துவரி, வீட்டுவரி 100 சதவீதம் அளவிற்கு மிகக்கடுமையாக உயர்த்தப் பட்டுள்ளதற்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!