கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெறுவோம்.. பாஜக தலைவர் முருகன் சபதம்..!

Published : Sep 22, 2020, 10:44 PM IST
கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெறுவோம்.. பாஜக தலைவர்   முருகன் சபதம்..!

சுருக்கம்

கன்னியாகுமரி மாவட்ட பாஜக கிளை மற்றும் அணி பிரிவு பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டார். அதன் பின்பு பேசிய எல்.முருகன்... "தமிழ்நாட்டில் பாஜக பெருமளவில் வளர்ந்து புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது.  

கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை நம்முடைய கட்சியில் மாற்றுக்கட்சியினர் பெரும் அளவில் இணைந்து வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சி. இதுபோன்ற ஆட்சி தமிழ் நாட்டில் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தேசிய கல்விக் கொள்கையால் உலகுக்கு வழி காட்டி இருக்கிறோம். இதனால் தொழில் கல்விக்கும், தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தல் விரைவில் நடைபெறலாம். இந்த நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெறுபவர் மத்திய அமைச்சராக தேர்ந்தெடுப்பார். குமரியில் நம்முடைய வெற்றியை தொடர்ந்து வரும் மே மாதம் நடக்கும் தேர்தலில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நம்முடைய முதலமைச்சர் கொடி ஏற்றுவார்.  41 லட்ச விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூபாய் 6000 செலுத்தியுள்ளோம். கொரோனா வைரஸ் சமயத்தில் பாஜகவினர் ஏழை எளிய மக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் உள்பட பல உதவிகளை செய்துள்ளனர். நாம் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெறுவோம் என்பது நம்முடைய சபதமாக இருக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.
 
PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!