
ஒன்றும் ஒன்றும் இரண்டு (1+1 = 2) அல்ல, 11 என, குஜராத் மக்களுக்கு பிரதமர் மோடி ‘புதிய கணக்கு’ பாடம் நடத்தினார்.
டுவிட்டர் பக்கத்தில்
குஜராத் சட்டப் பேரவைக்கான இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
பிரசாரம் நிறைவு பெற்ற நிலையில், நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-
மிகப்பெரிய வாய்ப்பு
குஜராத் வாக்காளர் பட்டியலில் 52 சதவீதம் அளவுக்கு இளம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அவர்கள், மாநில அரசும், மத்திய அரசும் ஒன்றிணைந்து செயல்படுவதால் குஜராத்துக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வாய்ப்பை நழுவ விட மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
ஒன்றும் ஒன்றும் இரண்டு அல்ல
மேலும், மத்திய அரசும், குஜராத் மாநில அரசும் ஒன்றிணைந்து பணியாற்றுவதால், கிடைக்கும் பலம் பல மடங்காக இருக்கும்.
அதாவது 1+1 என்றால் 2 அல்ல, மாறாக 11 என்ற அளவில் குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி இருக்கும் என்று டுவிட் செய்துள்ளார்.
பாஜக வெற்றி பெற்றால், மாநிலத்தின் வெற்றி உறுதி செய்யப்படும். எதிர்மறையான பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.