
அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது என பம்மலில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக துணபொதுச் செயலாளர் எல்.கே.சுதிஷ் குற்றச்சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் பல்வேறு அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளுக்கான சொத்துவரி பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கூட்டணிக் கட்சிகளும் கூட சொத்து வரியை கைவிடவேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
அதேவேளையில் காலி மனைகளுக்கும் 100% வயிறு உயர்த்தப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடு மற்றும் மனைகளை வைத்துள்ளவர்கள் அதிகப்படியான வரி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே சுதீஷ் சொத்து வரி உயர்வை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே சுதீஷ் தலைமையில் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கக் கூடிய சொத்துவரி மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும், சொத்து வரி உயர்வை உடனடியாக திமுக அரசு வாபஸ் பெறவேண்டி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறுகையில், தமிழக அரசு சொத்து வரியை உடனடியாக குறைத்துக்கொள்ள வேண்டும் என்றார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையை குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்கள் ஆனால் தற்போது வரை குறைக்காமல் உள்ளனர்.
மாநகராட்சி, நகராட்சிகளில் சாலை வசதிகள், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திவிட்டுதான் வரியை உயர்த்த வேண்டும். ஆனால் தமிழக அரசு எதையும் செய்யாமல் வரியை உயர்த்தி உள்ளது மிகவும் தவறு. தேமுதிகவை பொருத்தவரை அனைத்து மொழிகளையும் கற்போம் அன்னை மொழி காப்போம் இவ்வாறு கூறினார்.