சட்டம் மற்றும் அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்... ராகுல் தகுதி நீக்கம் விவகாரத்தில் காங்கிரஸ் கருத்து!!

By Narendran S  |  First Published Mar 24, 2023, 5:46 PM IST

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதை சட்டம் மற்றும் அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
 


ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதை சட்டம் மற்றும் அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ராகுல் காந்தி அச்சமின்றிப் பேசி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வெளிப்படையாக, அவர் அதற்கான விலையை செலுத்தி வருகிறார். அரசு திகைத்து நிற்கிறது. அவரது குரலை நசுக்க இந்த அரசு புதிய உத்திகளை கண்டுபிடித்து வருகிறது. சட்டத்தின் மற்றும் அரசியல் ரீதியாக இதை நாங்கள் எதிர்கொள்வோம். தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தடை வாங்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இதையும் படிங்க: ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்ட விவகாரம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!

Latest Videos

சட்டத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எதிர்காலத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடத்துவோம். எங்களை மிரட்ட முடியாது. அமைதியாக இருக்க மாட்டோம். பிரதமருடன் இணைக்கப்பட்ட அதானி மகாமெகா ஊழல் குறித்து பார்லிமென்ட் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் விசாரிப்பதற்கு பதிலாக, ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: சட்டம் அனைவருக்கும் சமம்! ராகுல்காந்திக்கும் அதே தான் - அண்ணாமலை பளீச்!

இந்திய ஜனநாயகத்திற்கு ஓம் சாந்தி'' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 'ராகுல் காந்தி தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார். திருடனை, திருடன் என்று அழைப்பது நம் நாட்டில் குற்றமாகிவிட்டது. திருடர்களும் கொள்ளையர்களும் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார்கள், ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டுள்ளார். இது நேரடியாக நடத்தப்பட்ட ஜனநாயக படுகொலை. அனைத்து அரசு அமைப்புகளும் அழுத்தத்தில் உள்ளன. இது சர்வாதிகாரத்தை முடிவு கட்டுவதற்கான ஆரம்பம்.  போராட்டம் மட்டுமே வழியைக் காட்ட வேண்டும்' என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

click me!