மோடிக்கு நாங்கள் எப்போதும் பச்சைக் கொடிதான் காட்டுவோம் - வேறு வழியில்லை என்கிறார் கே.டி.ராஜேந்திர பாலாஜி...

 
Published : Apr 10, 2018, 06:22 AM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
மோடிக்கு நாங்கள் எப்போதும் பச்சைக் கொடிதான் காட்டுவோம் - வேறு வழியில்லை என்கிறார் கே.டி.ராஜேந்திர பாலாஜி...

சுருக்கம்

We will always shown green flag for Modi - KD Rajendra Balaji

விருதுநகர்

பிரதமர் மோடி வருகையின்போது எதிர்கட்சிகள் கருப்பு கொடி காட்டுவது ஏற்புடையதல்ல என்ற அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நாங்கள் மோடிக்கு பச்சைக்கொடி காட்டுவோம் என்றார்.

விருதுநகரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "14 வருடங்களாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி மந்திரி சபையில் தி.மு.க. இடம் பெற்று இருந்தது. காவிரி ஆணை சட்டருக்கான சாவியை எடுத்துக்கொள்ள இவர்களுக்கு வாய்ப்பிருந்தது. அதை விட்டுவிட்டு தற்போது நடைபயணம் மேற்கொள்வது தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பது போன்றுள்ளது.

பிரதமர் வரும்போது எதிர்க்கட்சிகள் கருப்புக் கொடி காட்டுவோம் என்று கூறுவது ஏற்புடையதல்ல. நாங்கள் பச்சைக் கொடி காட்டுவோம். 

காவிரி மேலாண்மை பிரச்சனையில் சட்ட ரீதியாக தேவையான அழுத்தம் கொடுத்து வருகிறோம். 

காவிரி பிரச்சனை, பாலாறு பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை ஆகியவைகளில் அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றம் இருந்தது இல்லை. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு மீது மக்களுக்கு கோபமும், அதிருப்தியும் ஏற்படுவது உண்மைதான்" என்று  அவர் கூறினார்.  

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!