சுற்றுலா பயணிகளை சந்தோசப்படுத்துன நாங்க குடும்பத்த காப்பாத்த முடியல. ஊரடங்கால் குமுறும் படகு ஓட்டுனர்கள்.!!

By Thiraviaraj RMFirst Published Apr 8, 2020, 8:17 PM IST
Highlights

கடலூர் மாவட்டம, பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான பிச்சாவரம் படகு சவ்வாரி. இங்கு படகு ஓட்டும் ஓட்டுனர்கள், ஊரடங்கு உத்தரவு அமலானது முதல் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.இதனால் அவர்கள் குடும்பம் பொருளாதாரம் இல்லாமல் உணவுக்கே கஷ்டப்படுவதாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்கள்.
 
T.Balamurukan

பிச்சாவரத்தில் சுமார் 30 ஆண்டு காலமாக இந்த சுற்றுலா தளத்தில் படகு ஓட்டுனர்கள் பணியாற்றி வருகின்றார்கள். ஆனால் இவர்களுக்கு பணி நிரந்தரமோ, மாத சம்பளமோ கிடையாது. படகு ஒட்டினால் ஓட்டுகின்ற சவாரிக்கு ஏற்றவாறு அவர்களுக்கு கமிஷன் கிடைக்கும். இதுமட்டுமே அவர்களுக்கான ஊதியம்.  ஆக எந்த வித ஊதிய பாதுகாப்பும் இல்லாமல் பணியாற்றக்கூடிய படகு ஓட்டுனர்கள் மார்ச் 24ஆம் தேதி முதல் வேலை இல்லாமல் குடும்பத்தோடு கஷ்டப்பட்டு வருகின்றனர்.

 இது கோடைகாலம் ஆதலால் இந்த நேரத்தில் நிறைய சவாரி வரக்கூடிய நேரம். சுற்றுலாபயணிகள் வந்து குவியக்கூடிய நேரம்,இந்த நேரம் தான் இவர்கள் நாலுகாசு சம்பாதிக்க முடியும்.ஆனால் அவர்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு மிகப்பெரிய வாழ்வியல் போராட்டத்தை உருவாக்கி இருக்கிறது. எனவே, "தமிழக அரசாங்கமும், சுற்றுலாத்துறையும் வேலையில்லாமல் குடும்பத்தோடு சிரமப்பட்டு வரும் இந்த படகு ஓட்டுனர்களுக்கு மாதம் தலா 5,000 ரூபாய் என நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும்". என்று  சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் படகு ஓட்டுனர் சங்கத்தின் சிறப்பு தலைவர் எஸ் ஜி ரமேஷ்பாபு சங்கத்தின் செயலாளர் பி.டி.ராஜா, ரஜினி கோவிந்தன் ஆகியோர் சந்தித்து மனு அளித்திருக்கிறார்கள்.
 
click me!