
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதையடுத்து, முதல் முறையாக வரும் 8 ஆம் தேதி சட்ட பேரவை கூட்டத்தொடரில் பேச உள்ளார்
புத்தாண்டில் முதல் முறையாக கூடும், சட்ட பேரவை கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நாளில்,அதிமுக எம்எல்ஏக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என பன்னீர் செல்வம் அறிவுரை வழங்கி உள்ளார்
அதன்படி,
சட்டப்பேரவையில் கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்த தொய்வும் இல்லாமல் எம்.எல்.ஏ.க்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும்,
அ.தி.மு.க. கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும், கூச்சல் குழப்பத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஈடுபடக் கூடாது" எனவும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுரை கூறி உள்ளார்
தினகரன் கன்னிப்பேச்சு பேசும்போது அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் இடைமறித்து பேசக்கூடாது
சட்டப்பேரவையில் கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்த தொய்வும் இல்லாமல் எம்.எல்.ஏ.க்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும், அ.தி.மு.க.கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும், கூச்சல் குழப்பத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஈடுபடக் கூடாது என்றும் கண்டிஷனாக தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர் செலவம்.
அப்போது எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்-க்கு எதிராக பிரஷர் குக்கர் வெடிக்கும் அளவிற்கு பல திட்டங்கள் வைத்துள்ளதாக, தினகரன் தரப்பிலிருந்து சில ஆதரவாளர்கள் மூலம் தகவல் வெளியாகி உள்ளதாம்.
8 ஆம் தேதி சட்ட பேரவையில் என்னவெல்லாம் நடக்க வாய்ப்பு உள்ளது ?
அதிமுக எம்எல்ஏக்கள் தினகரனை பார்த்து சிரிக்கலாம்
கை அசைத்து பேசலாம்
சைகை காமிக்கலாம்
கை குலுக்கிக் கொள்ளலாம்
தினகரன் கேலியும் கிண்டலுமாக பேசலாம்
சில எம்எல்ஏக்களுக்கு கோபம் வரலாம்
குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமாரை தாக்கி பேசலாம்....
கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக கோஷங்களை எழுப்பலாம் ....
சபை -னு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே என்ற அளவிற்கு மைக்கு கூட பறக்கலாம்...
ஆனால் அன்றைய தினம் தினகரனுக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் யாராவது செயல்படுகிறார்களா என்பதை ஆளும் அதிமுக கண்டிப்பாக கவனிக்கும்.
மொத்தத்தில் சண்டை களமாக மாறுமா சட்டசபை என்ற கேள்வி எழுந்துள்ளது