வடஇந்தியாவில் பாஜக என்ன செய்து ஆட்சியை பிடித்தது எங்களுக்கு தெரியும்.. எச்சரிக்கையாக உள்ளோம்.. பொன்னையன்.!

By vinoth kumarFirst Published Feb 3, 2023, 12:30 PM IST
Highlights

உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜகவுடனான கூட்டணி முடிந்து விட்டது. பாஜக தனித்து தான் போட்டியிட்டது. ஆகையால், தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்வி அர்த்தம் இல்லை. 

பாஜக விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த பொன்னையன் கூறியுள்ளார். 

அண்ணாவின் 54 வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன்;- பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளோம். பாஜக வட நாட்டில் எப்படிப்பட்ட செயல்களை எல்லாம் செய்தது? பாஜகவின் நட்பு ஆட்சிகள் எப்படி எல்லாம் கவிழ்ந்தன? இந்த ஆட்சிகளை எல்லாம் பாஜக எப்படி எல்லாம் பிடித்தது? உங்களுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும். ஆகையால், நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். 

இதையும் படிங்க;- முடங்கும் நிலையில் இரட்டை இலை.! சமரச பேச்சு நடத்தும் பாஜக.! இபிஎஸ்யை தொடர்ந்து ஓபிஎஸ்யையும் சந்தித்த அண்ணாமலை

உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜகவுடனான கூட்டணி முடிந்து விட்டது. பாஜக தனித்து தான் போட்டியிட்டது. ஆகையால், தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்வி அர்த்தம் இல்லை. மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். 

சட்டவிதிகளை பின்பற்றாமல் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை கை காட்டுவதை ஏற்கவே முடியாது. 94.5 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளதால் இரட்டை இலை எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்கும் என பொன்னையன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  இபிஎஸ் இரட்டை இலை சின்னம் கேட்டு வந்தால் கையெழுத்து போடுவேன்! கண்டிப்பாக சசிகலாவை சந்திப்பேன்! ஓபிஎஸ் உறுதி.!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு என்ன என்பது குறித்து இதுவரை முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வத்தையும் அண்ணாமலை நேரில் சந்தித்தார். இருதரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாக தகவல் வெளியான நிலையில் பொன்னையன் இதுபோன்ற கருத்தை கூறியுள்ளார். 

click me!