
அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கு குழு கலைக்கப்டுவதாக ஓபிஎஸ் அண்மையில்அறிவித்தார். இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள டிடிவி தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ் செல்வன் எம்எல்ஏ இனி தங்களுக்கு எந்தங்ப பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார்.
சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் சிறைக்கு சென்ற பிறகு எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணைக்கப்படும் என பேச்சு எழுந்தது. இதற்காக இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஆனால் சசிகலா குடும்பத்தை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஓபிஎஸ் அணி சார்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது.
ஆனால் டி.டி.வி.தினகரன் சிறையில் இருந்து வெளிவந்தததும் அப்படியே காட்சி மாறிவிட்டது. இதையடுத்து ஓபிஎஸ், இரு அணி இணைப்புக்காக நியமிக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ, அதிமுகவை தொடர்ந்து நடத்திச் செல்லும் வகையில் மாநிலம் முழுவதும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாவுள்ளதாகவும், இதில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்ட பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது இணைப்பு பேச்சுவார்த்தை குழு கலைக்கப்பட்டு விட்டதாக ஓபிஎஸ் அறிவித்து இருப்பது நன்மைக்கே என்றும், இனிமேல் இரு அணிகள் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் தங்க தமிழ் செல்வன் தெரிவித்தார்.