
ஜெ.,மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க.,வில் இரு அணியாகப் பிரிந்த நிலையில், சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவிக்க 122 எம்.எல்.ஏ.,க்கள் கூவத்தூர் அழைத்துச் சென்று தங்க வைத்து கவனிக்கப்பட்டனர். அதில் மதுரை எம்.எல்.ஏ.,சரவணன் தப்பி வந்து, பன்னீர் அணியில் இணைந்தார்.
இந்நிலையில் எம்.எல்.ஏ.,சரவணன் மூன் டிவி.,நிருபரிடம் பேசியதை ரகசியாக வீடியோ பதிவு செய்து, அந்த வீடியோ டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி சேனலில் நேற்று ஒளிபரப்பட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில், கூவத்தூர் அழைத்து வந்த அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கு முதலில் 2 கோடி என்றும் பிறகு ஆறு கோடி வரை பேரம் பேசப்பட்டு வழங்கப்பட்டதாகவும், அ.தி.மு.க.,இல்லாமல் வெளியே இருந்து ஆதரவு கொடுத்த எம்.எல்.ஏ.,க்கள் கருணாஸ், தமீமும் அன்சாரி, தனியரசு ஆகியோருக்கு 10 கோடி ரூபாய் பேரம் பேசிக் கொடுக்கப்பட்டதாக கூறினார்.
மேலும், ஜெ.,மரணத்தை வைத்து பன்னீர் அரசியல் செய்வதாகவும் அவர் பா.ஜ.,வின் இணைந்து விடுவார் என்றும் தனக்கு தமிழகத்தில் அல்லது மத்தியில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் 500 கோடி சம்பாதித்து விடுவேன் என்றும் பேசியிருந்தார்.
இந்தச் செய்தி நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது, தமிழகத்தில் டைம்ஸ் நவ் செய்தி சேனல் முடக்கப்பட்டது. இந்நிலையில் விலை போன எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, சென்னையில் பன்னீர் செல்வம் இல்லத்தில் வைத்து, எம்.எல்.ஏ.,சரவணன் பேட்டியளித்தார். அப்போது அவர், டைம்ஸ் நவ் டிவியில் வெளியான வீடியோவில் உண்மை இல்லை. அந்த வீடியோவில் இருப்பது நான்தான், ஆனால் அதிலுள்ள குரல் என்னுடையது அல்ல.
குரலை மாற்றி பேசியுள்ளனர். நான் எம்.எல்.ஏ.,க்கள் பற்றி எதுவும் கூறவில்லை. கருணாஸ் உட்பட மூன்று எம்.எல்.ஏக்களை குறிப்பிட்டு பணம் வாங்கியதாகவும் கூறியுள்ளனர் அனைத்துத் தவறாக வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து அந்த டி.வி.,நிறுனத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளேன், என்றார். இந்நிலையில் சரவணன் எம்.எல்.ஏ வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்; மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் நம் ஆபீஸுக்கு வரவழைக்கப்பட்டார். எங்க அலுவலகத்துக்கு வரும்போது மரியாதை நிமித்தமா அவருக்கு சால்வை போர்த்தி எடுத்துக்கிட புகைப்படம்தான் நீங்க பார்க்கிறது. ஆனால் என்னை தெரியாதுன்னு அவர் சொல்லியிருக்கார். இன்னும் கூட எங்ககிட்ட நிறைய ஃபுட்டேஜஸ் இருக்குது. அல்வால்லாம் வாங்கி கொடுத்திருக்கோம். அந்த அல்வா வாங்கிக் கொடுத்த ஃபுட்டேஜஸை கூட பின்னாடி தேவைப்பட்டா நாங்க ரிலீஸ் பண்ணுவோம்.” என்று படத்துக்கு விளக்கமும் நேற்று கொடுத்திருந்தார்.
சரவணன் எங்கள் அலுவலகத்திற்கு வந்தார் என்ற ஆதாரத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம், அவர் வேண்டுமென்றால் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று சொல்லலாம் ஆனால் எங்களிடம் நிறைய ஆதாரம் இருக்கிறது. இவ்வளவு சொன்னவர் அது எந்த இடம் என்று சொல்லியிருக்கலாமே? அவரை எங்கள் அலுவலகத்திற்கு வரவழைத்தது என அணைத்து ஆதாரங்களும் எங்களுடன் உள்ளது என்றார்.
மேலும் ஏன் இவ்வளவு தாமதமாக இந்த வீடியோ வை வெளியிட்டீர்கள் என கேட்டதற்கு இன்னும் இந்த ஸ்ட்ரிங் ஆப்ரேஷன் இன்னும் முடியவில்லை கடந்த மாதம் 25 ஆம் தேதிவரை எடுத்திருக்கிறோம் எனவும் இன்னும் இரண்டு பாகங்கள் வெளியாகவுள்ளது என கூறினார். இந்த ஸ்ட்ரிங் ஆபரேஷனில் யார் யாரை எடுத்திருக்கிறோம் என்பது இன்றும், நாளையும் வெளியாகும் எனவும் கூறினார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் யாரும் அழைத்து பேசவில்லை அதற்க்கான அவசியமும் இல்லை, நாங்க கருணாஸ், தமிமுன் அன்சாரி அல்லது தனியரசயோ சொல்லவில்லை சரவணன் தான் அவர்கள் வாங்கினார் என்று அதில் பேசியுள்ளார். இது ஸ்ட்ரிங் ஆப்ரேஷன் அவர் என்ன பேசினாரா அதையே வெளியிட்டுள்ளோம் என்றார். அவர்கள் பணம் வாங்கவில்லை என்றால் சரவணன் மீது புகார் பண்ணலாம். அவர்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கட்டும் எங்களிடம் வலுவான ஆதாரம் இருக்கிறது.
இது மூன்று மாத சற்றிங் ஆப்ரேஷன் இதை நாங்கள் எப்படி செய்தோம் என மற்றொரு செய்தியாளர்கள் சந்திப்பில் தெளிவாக விளக்குவோம் என்றார். அதே போல பொதுவான மிரட்டல்கள் வருகிறது, பன்னீர்செல்வம் தரப்பாக கூட இருக்கலாம் அவர்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.