"ஜெ" ரத்த மாதிரி எங்களிடம் இல்லை" அப்போலோ தடாலடி..! அடுத்து என்ன செய்ய போகிறார் அம்ருதா ..?...!

 
Published : Apr 26, 2018, 12:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
"ஜெ" ரத்த மாதிரி எங்களிடம் இல்லை" அப்போலோ தடாலடி..! அடுத்து என்ன செய்ய போகிறார் அம்ருதா ..?...!

சுருக்கம்

we dont have blood sample said apollo hospital

ஜெயலலிதாவின் ரத்த மாதிரி தங்களிடம் இல்லை என அப்போலோ நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது

ஜெயலலிதா தான் தனது அம்மா என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் அப்போலோ மருத்துவமனைக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது

பெங்களூரில் உள்ள அம்ருதா, "நான் தான் ஜெயலலிதாவின் மகள், இதனை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனைக்கு தயார், அதற்கான மரபணு  ரத்த மாதிரி அப்போலோ மருத்துவமனையில் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பினார்.

பின்னர் இது குறித்து வழக்கு நடைபெற்று வந்த நிலையில்,ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் குறித்த விவரங்களை இன்று தாக்கல் செய்ய வேண்டும் என அப்போலோ மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்தது

ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா என ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டது என்பது குறிப்பிடத்தக்கது

ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூரு அம்ருதா தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது.  

இந்நிலையில் அப்போலோ நிர்வாகம் தங்களிடம் ரத்த மாதிரி இல்லை என தெரிவித்து உள்ளதால், அம்ருதாவின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதையும், நீதிபதி இது குறித்து என்ன தீர்ப்பு வழங்குவார் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்  

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!