நமக்கு நாமே எதிரி.! அழகிரி பேச்சு.!! தொண்டர்கள் அதிருப்தி..!!

Published : Feb 17, 2020, 11:27 PM ISTUpdated : Feb 18, 2020, 10:36 AM IST
நமக்கு நாமே எதிரி.! அழகிரி பேச்சு.!! தொண்டர்கள் அதிருப்தி..!!

சுருக்கம்

காங்கிரஸ் கட்சிக்கு எதிரி நமக்கு நாமே தான் என்று கே.எஸ். அழகிரி பேசியது கட்சி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.  

T.Balamurukan

 காங்கிரஸ் கட்சிக்கு எதிரி நமக்கு நாமே தான் என்று கே.எஸ். அழகிரி பேசியது கட்சி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி, ரயில் நிலையம் அருகேயுள்ள வரலாற்றுக் கூடத்தில் தமிழக காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில்  அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் கே.எஸ்.அழகிரி.

  'காங்கிரஸ் கட்சியை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் சீமான், வைகோ போன்றவர்கள் பேசி வருகிறார்கள்.அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்னைகளிலோ அல்லது கலவரங்களிலோ ஈடுபடுவதில்லை. காமராஜர் காலத்தில் கட்சி பேச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.அதன் பிறகு யாரும் பேச்சாளர்களுக்கான பயிற்சி கொடுக்க முன்வரவில்லை. நாம் தமிழகத்தில் எப்படி பின் தங்கி இருக்கிறோம். ஆனால், உட்கட்சி கூட்டங்கள் என்று வரும்போது மண்டை உடைந்து, ரத்தம் சொட்டும் அளவிற்கு மோதிக்கொள்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களால்தான் காங்கிரஸ் கட்சி மோசமான நிலையில் உள்ளது என்றார். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!