திருச்சி பெண் எம்.எல்.ஏவுக்கு ஒ.செ விட்ட பளார்..பளார்!!

Published : Feb 17, 2020, 11:09 PM IST
திருச்சி பெண் எம்.எல்.ஏவுக்கு ஒ.செ விட்ட பளார்..பளார்!!

சுருக்கம்

திருச்சி பெண் எம்எல்ஏவுக்கு ஒன்றியச் செயலாளர் ஒருவர் பளார் பளார்னு அறை விட்டதாக செய்தி பரவிபரவசமாகிக்கொண்டிருக்கிறது.

T.Balamurukan

திருச்சி பெண் எம்எல்ஏவுக்கு ஒன்றியச் செயலாளர் ஒருவர் பளார் பளார்னு அறை விட்டதாக செய்தி பரவிபரவசமாகிக்கொண்டிருக்கிறது.


திருச்சியில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் பணம் சரியாக செலவு செய்யவில்லை. கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் பணம் கொடுக்கவில்லை என கட்சியினர் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.


இந்த நிலையில் நேற்று மணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ பரமேஸ்வரி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது எம்எல்ஏவுக்கும் ஒன்றியச்செயலாளர் ஜெயக்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஒரு கட்டத்தில் ஜெயக்குமாரை அடிக்க எம்எல்ஏ பரமேஸ்வரி கையை ஓங்கியிருக்கிறார். எங்கே தன்னையை அடித்துவிடுவாரோ என்று நினைத்த ஒ.செ எம்எல்ஏவை பளார் என்று அறைந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் ஆலோசனைக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அதிமுக நிர்வாகிகள் எம்எல்ஏ வையும் ஒ.செ வையும்  சமாதானப்படுத்தினார்கள். இந்த சம்பவம் குறித்து அதிமுக தலைமைக்கழகத்திற்கு புகார் அனுப்பியிருக்கிறார்கள். ஒ.செ பதவி ஜெயக்குமாருக்கு தப்புமா?
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!