நாங்கதான் உள்ள புகுந்து அடிச்சோம் !! இப்ப அதுக்கு என்ன? ஜேஎன்யூ தாக்குதலுக்கு பொறுப்பேற்ற இந்து ரக் ஷா அமைப்பு பொறுப்பேற்பு !!

Selvanayagam P   | others
Published : Jan 08, 2020, 08:39 AM IST
நாங்கதான் உள்ள புகுந்து அடிச்சோம் !! இப்ப அதுக்கு என்ன?  ஜேஎன்யூ தாக்குதலுக்கு பொறுப்பேற்ற இந்து ரக் ஷா அமைப்பு பொறுப்பேற்பு !!

சுருக்கம்

டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  கடந்த 5ம் தேதி நடந்த கொடூர தாக்குதல் சம்பவத்துக்கு, இந்து ரக் ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

எங்கள் மதத்தை இழிவாக பேசியதால் தாக்குதல் நடத்தினோம் அதய்கு இப்போ என்ன ? என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.டெல்லியில், உள்ள, ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில்,  கடந்த 5ம் தேதி மாலை, முகமூடி அணிந்த சில மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள், பல்கலைக்கழக  வளாகம் மற்றும் மாணவர் விடுதிகளுக்குள் சென்று, கண்ணில்பட்ட, மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்களை, உருட்டுக் கட்டை மற்றும் இரும்பு தடிகளால், சரமாரியாக தாக்கினர். 

இதில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள், உடனடியாக, டெல்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
.
பல்கலைக்கழக  மாணவர் சங்க தலைவர் அய்ஷ் கோஷ் தலையில், காயம் ஏற்பட்டது.  ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தகவர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ஜேஎன்யூ மாணவர் சங்கம் குற்றம் சாட்டியிருந்தது. 

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஹிந்து ரக் ஷா தளம் என்ற அமைப்பு, இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

இது குறித்து, அந்த அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி, தன் 'டுவிட்டர்' பக்கத்தில், 'வீடியோ' ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்  தேச விரோத சக்திகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதை, எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். நாங்கதான் உள்ள புகுந்து அடிச்சோம்… அதுக்கு என்ன இப்போ ? இதற்கு நாங்கள் முழு பொறுப்பேற்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

பிங்கி சவுத்ரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்ட முகமூடி அணிந்த நபர்களின் அடையாளத்தை, தொழில்நுட்ப உதவியுடன் கண்டுபிடிக்கும் முயற்சியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி