
நாங்க சட்டமன்ற தேர்தலே சந்திக்க தயார்ன்னு சொல்லிட்டு இருக்கேன் நீங்க உள்ளாட்சி தேர்தல கேட்டுட்டு இருக்கீங்க என டிடிவி தினகரன் நக்கல் அடித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் பழனிச்சாமி, தமிழகத்தில் தொகுதி வாரியாக வரையறை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த பணிகள் நிறைவு பெற்றதும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
நடப்பாண்டின் இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் எனவும் கீழடி அகழாய்வு பணிகள் மீண்டும் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
கோவையில் மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது அதற்காக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்த பின், ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.
இதனிடையே டிடிவி தினகரன் சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலாவை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உள்ளாட்சி தேர்தல் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த டிடிவி நாங்க சட்டமன்ற தேர்தலே சந்திக்க தயார்ன்னு சொல்லிட்டு இருக்கேன் நீங்க உள்ளாட்சி தேர்தல கேட்டுட்டு இருக்கீங்க என நக்கல் அடித்தார்.