நாங்க பெரியகட்சி.. அது கூட எங்கள ஒப்பிடாதீங்க.. அதிமுகவை லெட்டர்பேட் ரேஞ்சுக்கு விமர்சித்த கரு. நாகராஜன்.

By Ezhilarasan BabuFirst Published Nov 25, 2021, 7:13 PM IST
Highlights

கூட்டணியில் மாற்றம் இருக்கிறதா இல்லையா என்பதை எல்லாம் மாநில தலைமையும், அகில இந்திய தலைமையும்தான் முடிவு செய்யும். அதே சமயம் பாஜக தனித்து போட்டியிட தயார் தான் என்ற நிலையை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என அவர் கூறியுள்ளார். 

தேசிய அளவில் பாஜக பெரிய கட்சி என்றும், அதனால் அதிமுகவும் பாகவும் ஒன்று அல்ல என்றும், தயவு செய்து அதிமுகவுடன் பாஜகவை ஒப்பிடாதீர்கள் என்றும்  அக்காட்சியை சேர்ந்த கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார். இது அதிமுக உண்மைத் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்தித்தது. அதில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வென்று சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர். பல ஆண்டுகளாக தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக தலைவர்கள் கூறிவரும் நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பாஜக தனது வெற்றி கணக்கை தொடங்கி உள்ளது.

குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அக்காட்சி  தனது செல்வாக்கை விஸ்தரிக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து வந்தாலும் தமிழகத்தில் பாஜகவுக்கென தனித்துவத்தை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் அதிமுக எதிர்க்கட்சி என்றாலும்கூட தொடர்ந்து திமுகவை விமர்சிப்பதில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. சட்டமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஒருபுறம் மக்கள் மன்றத்தில் பாஜகதான் எதிர்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் அதிமுகவிலிருந்து பலரும் பாஜகவிற்கு படையெடுத்து வருவதை பார்க்க முடிகிறது. இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்தாலும் அதை மறைந்து சக கூட்டணி  கட்சியின் இருப்பவர்களுக்கே பாஜக தூண்டில் போடும் வேலையில் ஈடுபட்டு வருவது, இது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது என்பதுடன், இக்கூட்டணி உறவு நகை முரணாக உள்ளது.

இந்நிலையில் தனியார் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரூர் நாகராஜன் தெரிவித்துள்ள கருத்து அதிமுகவினரை மிகுந்த அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதிமுகவை ஏதோ ஒரு லெட்டர்பேட் கட்சி ரேஞ்சுக்கு அவர்பேசியுள்ளதுதான் அதற்கு காரணம்.  அதாவது, தமிழக மக்களுக்கான பிரச்சனைகளை கையிலெடுத்து செயல்படுத்துவதில் பாஜக முன்னோடியாக இருந்து வருகிறது என்றும், மற்றபடி அதிமுக முன்னேறுகிறதா, பின்னேறுகிறதா என்பதெல்லாம் அந்த கட்சியினுடைய வேலை, ஆனால் பாஜக என்பது தேசிய அளவிலான மிகப்பெரிய கட்சி, எனவே நாங்களும் அதிமுகவும் ஒன்றல்ல, எங்களோடு அதிமுகவையும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார். அதேபோல் வரப்போகிற  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி இடையே மாற்றம் இருக்குமா தொடருமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்,

கூட்டணியில் மாற்றம் இருக்கிறதா இல்லையா என்பதை எல்லாம் மாநில தலைமையும், அகில இந்திய தலைமையும்தான் முடிவு செய்யும். அதே சமயம் பாஜக தனித்து போட்டியிட தயார் தான் என்ற நிலையை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என அவர் கூறியுள்ளார். அதிமுகவின் கூட்டணியில் உள்ள பாஜக தற்போது அதிமுகவுடன் தங்களை ஒப்பிட்டு பேச வேண்டாம், தாங்கள் பெரிய கட்சி என்றும், அதிமுகவை ஏதோ ஒரு லெட்டர்பேடு கட்சி போல கரூர் நாகராஜன் கருத்து கூறி இருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஒரு காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு கிடைக்காத என்று ஏங்கி தவித்த கட்சிகள் இன்று அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர். அதிமுகவை எடுப்பார் கைப் பிள்ளையாக பாவிப்பது  அதிமுக உண்மைத் தொண்டர்களை உள்ளபடியோ மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது என்பதே உண்மை. 

 

click me!