அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டிய மதிமுக நிர்வாகி.. கண்கள் சிவந்த வைகோ. ஒரே நொடியில் தூக்கி அடித்து அதகளம்.

By Ezhilarasan BabuFirst Published Nov 25, 2021, 6:23 PM IST
Highlights

இந்நிலையில்தான் அவர் தண்ணீர் திறக்க வருவதை விவசாயிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் விவசாயிகள் ஒன்று திரண்டு அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டுவது என முடிவு செய்தோம். 

விவசாயிகளின் பாசனத்துக்காக அணையில் இருந்து நீர் திறக்க வந்த திமுக அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்ற மதிமுக நிர்வாகியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கட்சியில் இருந்து நீக்கி அறிவித்துள்ளார். கொடகனாறு அணையிலிருந்து நீர் திறந்து விடாமல் அமைச்சர் காலம் தாழ்த்தி வந்ததால், அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்ட முயன்றதாகவும், மதிமுக துவங்கப்பட்டதில் இருந்து கட்சியில் இருந்து வரும் தன்னை எந்த விளக்கமும் கேட்காமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் என்றும் நீக்கப்பட்ட மதிமுக வேடசந்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் 
ராமசாமி வேதனை தெரிவித்துள்ளார்.  

ஒரு குறிப்பிட்ட காலம் வரை எலியும் பூனையுமாக இருந்த அதிமுக-திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. அதில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது, அந்த 6 தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் ஒப்புக்கொண்டார் வைகோ. அதில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு நுழைந்துள்ளனர். தற்போது மீண்டும் கட்சி வேகமெடுக்க தொடங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அழகாபுரி கொடகனாறு அணையிலிருந்து வலது கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 22ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சரவை ஐ.பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர். 

தண்ணீர் திறக்க அமைச்சர் வருகிறார் என்று அறிந்த அப்பகுதி விவசாயிகள் சங்கத்தினர் அவருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன்படி கொடகனாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் ராமசாமியை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். ராமசாமி மதிமுகவில் வேடசந்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஆவார். கூட்டணி கட்சியில் உள்ள அமைச்சருக்கே எதிர்ப்பு தெரிவித்து மதிமுக நிர்வாகி தலைமையில் கருப்புக் கொடி காட்ட முயன்ற தகவல், மதிமுக பொதுச்செயலர் வைகோ காதுக்கு எட்டியது. விஷயத்தை கேள்விப்பட்டு கோபத்தின் உச்சத்திற்கு சென்ற வேகோ. அதிரடியாக வேடசந்தூர் ஒன்றிய செயலாளராக இருந்த ராமசாமியை கட்சியிலிருந்து நீக்கி அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராமசாமி, கொடகனாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும்  என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை, இதை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். குடகனாறு அருகே வள்ளிப்பட்டி, கூம்பூர், வடும்பாடி  ஆர்.கோம்பை ஆகிய பகுதிகளில் மணல் திருட்டும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. எனவே அணையில் இருந்து தண்ணீர் திறந்தாற் அதை கட்டுப்படுத்த முடியும் என்பதால் இதுகுறித்து அமைச்சருக்கு பலமுறை கோரிக்கை வைத்தோம். அதற்கு செவிசாய்க்கவில்லை, அதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தோம் பலன் இல்லை, அப்போது எங்களை சந்தித்த அமைச்சர் ஆதரவாகப் பேசினார். இன்னும் சில காலம் கழித்து தலைவர் மு. கருணாநிதி அவர்கள் இந்த அணையை தவறாக கட்டிவிட்டார், ஆயக்கட்டு இல்லை என்பதால் அணையிலிருந்து தண்ணீர் திறக்க சாத்தியமில்லை எனக் கூறினார்.

இந்நிலையில்தான் அவர் தண்ணீர் திறக்க வருவதை விவசாயிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் விவசாயிகள் ஒன்று திரண்டு அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டுவது என முடிவு செய்தோம். இதை எப்படியோ அறிந்து கொண்ட போலீசார் முன்கூட்டியே எங்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துவிட்டனர். நான் நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக தொடர்ச்சியாக குரல் கொடுப்பதை அமைச்சரின் உடன் இருப்பவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்சியில் எந்த பொறுப்பும் வேண்டாம் என எழுதிக் கொடுத்து விட்டுத்தான் கட்சியிலிருந்து வந்தேன். மதிமுக தொடங்கப்பட்ட காலம் முதல் கட்சியில் இருந்து வருகிறேன், என்ன நடந்தது என்றே விளக்கம் கூட கேட்காமல் கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள் என தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார். 

 

click me!