மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: அடுத்த 24 மணி நேரத்திற்குள் இது நடக்குமாம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 15, 2020, 1:56 PM IST
Highlights

அக்டோபர் 14ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும்  மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது, முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. 

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்சையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகும், கடந்த 24 மணிநேரத்தில் இரணியல் (கன்னியாகுமரி) பெரியாறு (தேனி) 5 சென்டி மீட்டர் மழையும், சித்தார் (கன்னியாகுமரி) குளச்சல் (கன்னியாகுமரி) தலா 4 சென்டிமீட்டர் மழையும், வால்பாறை (கோவை) சின்னக்கல்லார் (கோவை) சுரலாக்கோடு (கன்னியாகுமரி) பாபநாசம் (திருநெல்வேலி) பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.  

அக்டோபர் 14ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும்  மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தென் தமிழக கடலோரப் பகுதிகளில், குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை  16-10-2020 இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 2.5 முதல் 3.5 மீட்டர் வரை எழும்பக் கூடும், எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள்  செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

 

click me!