இன்னும் 4 மாதங்கள் காத்திருக்கணுமா..? பெண்களிடம் மு.க.ஸ்டாலின் சொன்ன கர்ப்பக் கதை..!

By Thiraviaraj RMFirst Published Jan 4, 2021, 4:06 PM IST
Highlights

இப்படியே பேசாமல் இங்கேயே நின்று கொண்டு, உங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆண்கள் கொஞ்சம்தான் இருக்கிறார்கள். பெண்கள் தான் அதிகமான அளவில் இருக்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் பேசினார்.

இப்படியே பேசாமல் இங்கேயே நின்று கொண்டு, உங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆண்கள் கொஞ்சம்தான் இருக்கிறார்கள். பெண்கள் தான் அதிகமான அளவில் இருக்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் பேசினார்.

கரூர், குப்பிச்சிபாளையத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ’’மக்கள் கிராமசபைக் கூட்டம் என்று கூறி, சுற்றிக் கொண்டே இருந்தால் பெண்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இது மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் நடத்தினாலும் ஒட்டுமொத்த தாய்மார்கள், பொதுமக்கள், ஆண்கள் அத்தனை பேரும் இங்கு வந்திருக்கிறீர்கள்.

 

மகளிர் கூட்டம் போல, மகளிர் அணி மாநாடு போல இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. வியப்பாக இருக்கிறது. எனக்கு இப்பொழுது என்ன தோன்றுகிறது என்றால் - வெளிப்படையாக உங்களிடத்தில் சொல்லுகிறேன் - இப்படியே பேசாமல் இங்கேயே நின்று கொண்டு, உங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆண்கள் கொஞ்சம்தான் இருக்கிறார்கள். பெண்கள் தான் அதிகமான அளவில் இருக்கிறார்கள். ஆண்கள் எல்லாம் பெண்களைச் சுற்றி அரணாக இருந்து கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பு எப்பொழுதும் ஆண்கள்தான் என்பதற்கு இது ஒரு சான்று. அதேபோல, ஆண்களை ஊக்கப்படுத்துவது பெண்கள் தான். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் தான் நிச்சயமாக இருப்பார். அதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

ஒரு பீர்பால் கதை சொல்கிறேன். அக்பர் அமைச்சரவையில் பல அமைச்சர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் பீர்பால். மன்னர் அக்பர் என்ன சொன்னாலும் அதனை நிறைவேற்றி விடுவார். பீர்பாலுக்கு அக்பர் ஒரு சோதனை வைக்கிறார். உன்னால் முடியாத ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லப்போகிறேன் என்று கூறி, காளை மாடு ஈன்ற கன்றுக் குட்டியைக் கொண்டு வந்து கொடுக்குமாறு பீர்பாலிடம் சொல்கிறார் அக்பர். அதற்கு மூன்று நாட்கள் அவகாசம் கேட்கிறார் பீர்பால். மூன்றாவது நாள் விடியப் போகிறது. அதற்கு முந்தைய நடு இரவில், அக்பர் கூறியதை நிறைவேற்ற முடியாதே என்ற சிந்தனையில் பீர்பால் தூக்கமின்றித் தவித்தார். மனைவி என்னவென்று கேட்டார். பீர்பால் விவரத்தைச் சொன்னார். 

கவலைப் படாமல் தூங்குங்கள் என்று பீர்பாலைத் தூங்க வைத்தார் அவரது மனைவி. பின்னர் அழுக்குத் துணிகளை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு வந்து அவற்றை அடித்துத் துவைக்கிறார் பீர்பால் மனைவி. நள்ளிரவில் துணி துவைக்கும் சப்தம் கேட்டு அக்பர் அந்தப் பெண்ணை அழைத்துவரச் சொல்கிறார். ‘ஏன் நள்ளிரவில் துணி துவைக்கிறாய்’ என்று அக்பர் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்கிறார். அதற்கு அவள், ‘எனது கணவர் கர்ப்பமாக இருப்பதால், அவருக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்து விட்டு, இப்போதுதான் துணி துவைக்க நேரம் கிடைத்தது’ என்று கூறுகிறாள். ‘அது எப்படி ஆண் கர்ப்பமாக இருப்பான்?’என்று கேட்டார் அக்பர். 

‘காளை மாட்டில் இருந்து கன்றைக் கொண்டு வருமாறு நீங்கள் சொல்லவில்லையா?’ என்று அந்தப் பெண் அக்பரிடம் திரும்பக் கேட்கிறாள். அதில் இருந்து அந்தப் பெண் பீர்பால் மனைவி என்பதை அறிந்தார் அக்பர். அப்போதுதான் இத்தனை நாளும் தான் சொன்னதையெல்லாம் பீர்பால் நிறைவேற்றுவதற்கு அவரது மனைவியே காரணம் என்பது அக்பருக்குப் புரிந்தது. அதுபோல் பெண்கள் ஒத்துழைத்தால்தான் ஆண்கள் எதையுமே சாதிக்க முடியும்.பீர்பாலின் கதையில் பீர்பாலுக்கு அவரது மனைவி எவ்வாறு துணையாக இருந்தாரோ, அது போல ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் நிச்சயமாக இருப்பார். எனவே நீங்கள் நினைத்தால் வெற்றி நிச்சயம்.

பெண்கள், தாய்மார்கள், சகோதரிகள், அருமையாக உட்கார்ந்து இருக்கிறார்கள். இந்தக் காட்சிகளைப் பார்க்கிற பொழுது, இன்னும் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டுமா? இப்பவே வந்து விடக் கூடாதா? என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.கொஞ்சம் பொறுங்கள். “பொறுத்தது போதும் பொங்கி எழு“ என்று சொல்லுவார்கள். இவ்வளவு நாட்கள் பொறுத்துக் கொண்டீர்கள். “பொருமை கடலினும் பெரிது” என்று சொல்வார்கள். ஆதலால் இன்னும் 4 மாதங்கள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள்’’ என அவர் தெரிவித்தார்.

click me!