அடி தூள்.. நீட் தேர்வு போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்றது.. சட்ட மன்றத்தில் ஆளுநர் அதிரடி சரவெடி..

By Ezhilarasan BabuFirst Published Jan 5, 2022, 11:37 AM IST
Highlights

அதை ஆளுநர் பரிந்துரை செய்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுநர் இதுவரை அந்த மசோதா மீது பாராமுகமாக இருந்து வருகிறார். 

நீட் தேர்வு போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்றது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி உரை நிகழ்த்தியுள்ளார். அவரின் இந்த உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நீட் தேர்வு விலக்கு மசோதா மீது ஆளுநர் பாராமுகமாக இருந்து வரும் நிலையில் தற்போது அவரே நீட் தேர்வு தேவையற்றது என சட்டமன்றத்தில் பேசியிருப்பது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு மருத்துவ படிப்பிற்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு ( நீட் )அறிமுகம் செய்தது. இந்த தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது முதலே தமிழக மக்களும், தமிழக அரசும் இந்த தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  திமுக ஆட்சி அமைத்தால் நீட் தேர்வை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  தமிழகத்தில் நீட் தேர்வை விளக்க வேண்டும் என சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதை ஆளுநர் பரிந்துரை செய்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுநர் இதுவரை அந்த மசோதா மீது பாராமுகமாக இருந்து வருகிறார். இதை தமிழக அரசியல் கட்சிகள் பலவும் கண்டித்து வருகின்றன. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனியார் அமைப்பு ஒன்று தாக்கல் செய்து ஆர்டிஐ மனுவில், நீட் விலக்கு மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியானது.  இந்நிலையில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது நீட் விலக்க மசோதா மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் பாராமுகமாக இருந்து வரும் ஆளுநரை கண்டித்தும், ஆளுநர் உரையை புறக்கணித்தும் திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் சட்டப் பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வு குறித்து உரை நிகழ்த்தியுள்ளார். நீர் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம், இது போன்ற நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமமற்ற தளத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. எனவே தொழில் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நீட் போன்ற நுழைவு தேர்வுகள் தேவையற்றவை என்ற இந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம் என கூறியுள்ளார். நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து  பரிசீலனை செய்யாமல் இருந்து வரும் ஆளுநர் தனது சட்டமன்ற உரையில் இத்தேர்வு தேவையற்றது என வலியுறுத்தி பேசியிருப்பது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. 
 

click me!