
தமிழகத்தில் தடுப்பூசியை மக்கள் இயக்கமாக மாற்றி இரண்டாம் ஆலையை தடுத்தவர் முதல்வர் ஸ்டாலின் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டியுள்ளார். மேலும் தமிழகம் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஆளுநரின் இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தமிழக சட்டப்பேரவை கூடும் பொது ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்தி வருகிறார். இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக எதிர்க்கட்சியான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து சரியாக காலை 10 மணிக்கு சட்டமன்றம் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அதில் ஆளுநர் உரையாற்றி வருகிறார்.அப்போது பேசிய ஆளுநர், கொரோனா காலத்தில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் வீரியத்தை கட்டுப்படுத்தியது. அரசு எடுத்த துரித நடவடிக்கையால் தமிழகத்தில் உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஒமைக்ரான் வைரஸ் தொற்றை தடுக்கவும் தமிழக அரசு அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்த 27, 432 பேரின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் நிர்வாணமான நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. தடுப்பூசி பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி இரண்டாம் ஆலையை முதல்வர் ஸ்டாலின் தடுத்துள்ளார் என்றும் அது பாராட்டுக்குரியது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக முதல்வரை வெகுவாக பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், அணை கட்ட கர்நாடக அரசை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினார். கூட்டத்தொடர் தொடங்கிய உடனேயே நீட் ரத்து மசோதாவை கிடப்பில் போட்டுள்ள ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். அப்போது அவையில் கூச்சல் குழப்பம் எழுந்தது. பின்னர் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதேநேரத்தில் அதிமுகவினர் அம்மா கிளிக் மூடப்பட்டதை கண்டித்தும், முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடந்த ரெய்டுகளை கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர்.