அடி தூள்.. புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தது..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 5, 2020, 2:29 PM IST
Highlights

விமான நிலையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மத்திய குழு சென்னையில் உள்ள ஒட்டலுக்கு சென்றனர். மாலை 4 மணிக்கு தமிழக முதலமைச்சர், தலைமை செயலாளர் ஆகியோரை சந்திக்கின்றனர். 

நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இந்த இடங்களை  ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் மத்திய விவசாயிகள் நலத்துறை இயக்குனர் டாக்டர் மனோகரன், தேசிய நெடுஞ்சாலை துறை மண்டல அலுவலர் ரனஞ்ச் ஜெ சிங், நிதித்துறை இயக்குனர் சுமன், கிராமிய வளர்ச்சி துறை இயக்குனர் தர்ம்வீர் ஜா ஆகியோர் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். 

விமான நிலையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மத்திய குழு சென்னையில் உள்ள ஒட்டலுக்கு சென்றனர். மாலை 4 மணிக்கு தமிழக முதலமைச்சர், தலைமை செயலாளர் ஆகியோரை சந்திக்கின்றனர். 6ந் தேதியில் இருந்து 7ந் தேதி மாலை வரை பாதிக்கப்பட்ட இடங்களை 2 குழுக்களாக பிரித்து ஆய்வு செய்துவிட்டு சென்னை திரும்புகின்றனர். 8ந் தேதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். 4 நாள் ஆய்வை முடித்துவிட்டு 8ந் தேதி மாலை டெல்லிக்கு செல்கின்றனர். மத்திய அரசிடம் புயல் சேதம் குறித்து அறிக்கையை தருகின்றனர்.
 

click me!