உபி தேர்தல் : 4ம் கட்ட வாக்குப்பதிவு ! இன்று தொடங்கியது !

Published : Feb 23, 2022, 08:00 AM IST
உபி தேர்தல் : 4ம் கட்ட வாக்குப்பதிவு ! இன்று தொடங்கியது !

சுருக்கம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 4-ம் கட்டமாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ம் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்டத்திலும் சேர்த்து 61.20 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. 3-வது கட்டமாக கடந்த 19ம் தேதி 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

இந்நிலையில், 59 தொகுதிகளுக்கான 4-வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

லக்னோ, ரேபரேலி, லக்கிம்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெறும் இந்த 4-வது கட்ட தேர்தலில் மொத்தம் 624 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

4 ஆம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளில் 2017 சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 51 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 4 தொகுதிகளை சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் 3 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தன. பாரதிய ஜனதா கூட்டணியில் அப்னா தள் சோனோலால் ஒரு தொகுதியை வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!