வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்... வாக்காளர்கள் தயாரா...?

 
Published : Mar 19, 2017, 07:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்... வாக்காளர்கள் தயாரா...?

சுருக்கம்

Voters voting machines are ready

ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தலுக்காக 1200 வாக்குபதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், வாக்களிப்பதிவின் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்க்கான வேட்பாளர் மனுதாக்கல் நடைபெற்று வருகிறது.

தேர்தல் நடத்தும் அதிகாரியாக முன்னதாக பத்மஜாதேவி தேர்வு செய்யபட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மனுக்கள் குவிந்தமையால் அவர் மாற்றபட்டார்.

தற்போது தேர்தல் அதிகாரியாக பிரவின் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வாக்குபதிவு எந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

புளியந்தோப்பு டிக்காசா ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 350 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1,200 வாக்குப்பதிவு எந்திரங்களும் உள்ளன.

நாளை அல்லது நாளை மறுதினம் டெல்லியில் இருந்து தேர்தல் அதிகாரிகள் வந்து வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து சான்றிதழ் வழங்குவார்கள்.

அதைத்தொடர்ந்து நாங்கள் வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க இருக்கிறோம்.

ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுப்பதற்காக கண்காணித்து வருகிறோம்.

3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழு, 2 வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுக்கள் 24 மணி நேரமும் ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணித்து வருகிறது.

வாக்களிப்பதிவின் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

வருகிற வாரத்தில் அதற்கான நிகழ்ச்சிகள் ஆர்.கே.நகர் தொகுதியில் நடத்த இருக்கிறோம். 

இவ்வாறு கூறினர்.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்