வாக்குப்பதிவு இயந்திரங்களில் தாமரை சின்னத்தில் வாக்கு.. பலத்த சந்தேகம் கிளப்பும் ஜோதிமணி..!

By Thiraviaraj RMFirst Published Apr 7, 2021, 12:05 PM IST
Highlights

'அதெப்படி ஒவ்வொரு முறையும், எல்லா மாநிலங்களிலும் கோளாறான இயந்திரங்களில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரைக்கே பதிவாகிறது?  ஏன் ஒருமுறை கூட மற்ற சின்னங்களில் பதிவாவதில்லை?' என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார் 
 

'அதெப்படி ஒவ்வொரு முறையும், எல்லா மாநிலங்களிலும் கோளாறான இயந்திரங்களில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரைக்கே பதிவாகிறது?  ஏன் ஒருமுறை கூட மற்ற சின்னங்களில் பதிவாவதில்லை?' என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார் 

தமிழகத்தில்நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, விருதுநகர் சத்ரிய பள்ளி வாக்குச்சாவடியில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜகவின் தாமரை சின்னத்தில் வாக்குப் பதிவாகுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வாக்கு இயந்திரத்தில் குளறுபடி நடந்துள்ளதாக வாக்காளர்கள் குற்றஞ்சாட்டினர். உடனடியாக, வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு வாக்கு இயந்திரத்தை பரிசோதிக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

நேற்று விருதுநகரில் ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.இது ...

Posted by Jothimani Sennimalai on Tuesday, 6 April 2021

 

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘’நேற்று விருதுநகரில் ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இது இயற்கையானதாகக் கூட இருக்கலாம். ஆனால், அதெப்படி ஒவ்வொரு முறையும், எல்லா மாநிலங்களிலும் கோளாறான இயந்தியரங்களில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரைக்கே பதிவாகிறது? ஏன் ஒருமுறை கூட மற்ற சின்னங்களில் பதிவாவதில்லை?'' என பதிவிட்டுள்ளார்.

click me!