தூக்கில் தொங்க முயன்ற தொண்டர்... ராகுல் காந்தியால் அதிர்ச்சி..!

Published : Jul 02, 2019, 04:12 PM IST
தூக்கில் தொங்க முயன்ற தொண்டர்... ராகுல் காந்தியால் அதிர்ச்சி..!

சுருக்கம்

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்யக்கூடாது என வலியுறுத்தி தூக்கில் தொங்க முயன்ற அட்கட்சி தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது. 

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்யக்கூடாது என வலியுறுத்தி தூக்கில் தொங்க முயன்ற அட்கட்சி தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது. 

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை கைவிடுங்கள் என்று ராகுல் காந்தியை நேற்று 5 மாநிலங்களை ஆளும் காங்கிரஸ் முதல் மந்திரிகள் சந்தித்து வலியுறுத்தியும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
 இதற்கிடையில், ராகுல் காந்தி ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தின் அருகே சில நாட்களாக அக்கட்சி தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி டெல்லி காங்கிரஸ் அலுவலகம் அருகே இன்று ஒரு தொண்டர் தூக்கில் தொங்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாரிடம் இருந்து விடுபட முயன்ற காங்கிரஸ் தொண்டர் கையில் பிளாஸ்டிக் கயிறுடன் திடீரென்று அங்கிருந்த ஒரு மரத்தில் ஏறிய அந்நபரை போலீசார் சமாதானம் செய்து கீழே அழைத்து வந்தனர். ராஜினாமா முடிவை ராகுல் காந்தி கைவிடாவிட்டால் இன்று இங்கு இல்லாவிட்டாலும் வேறெங்காவது நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என அந்நபர் பிடிவாதமாக தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்