கமல் பெயரை கேட்டதும் கைகூப்பி கும்பிட்டு தெறித்து ஓடிய பிரபலம்!!

First Published Feb 19, 2018, 10:19 AM IST
Highlights
visu denied to react about kamal political entry


சினிமாவின் இருதுருவங்களாக திகழும் ரஜினியும் கமலும் ஒரே நேரத்தில் அரசியலில் குதிப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்துவிட்ட ரஜினி, அரசியல் கட்சி தொடங்கும் வேலைகளில் ஈடுபட்டுவருகிறார். 

ஆனால், கமலோ ரஜினியை முந்தி சென்று கொண்டிருக்கிறார். வரும் 21ம் தேதி(நாளை மறுநாள்) ராமேஸ்வரத்தில் அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அதற்கு முன்னதாக டி.என்.சேஷன், நல்லக்கண்ணு, ரஜினிகாந்த், கருணாநிதி என பலரை கமல் சந்தித்துள்ளார். 

இவ்வாறு இருவருமே அரசியல் பயணத்தை ஒருசேர தொடங்குகின்றனர். இவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு வரவேற்பும் எதிர்ப்பும் சம அளவில் உள்ளன.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநரும் நடிகருமான விசு, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, ரஜினியின் ஆன்மீக அரசியலை வரவேற்பதாக தெரிவித்தார்.

அதன்பிறகு கமலின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் கமலை பற்றி மட்டும் என்னிடம் கேட்காதீர்கள் என கைகூப்பி கும்பிட்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

கமலை பற்றிய கேள்விக்கு விசு இவ்வாறு எதிர்வினை ஆற்றியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!